உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா தொடர்பாக பொய் புகார் அளித்தவர் கைது: 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

தர்மஸ்தலா தொடர்பாக பொய் புகார் அளித்தவர் கைது: 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தட்சிண கன்னடா:தர்மஸ்தலாவில் நுாற்றுக்கணக்கான பெண் சடலங்கள் புதைக்கப்பட்டதாக பொய் புகார் அளித்தவரை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவரை, 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க எஸ்.ஐ.டி.,க்கு, பெல்தங்கடி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி மாவட்டத்துக்கு முகமூடி அணிந்த நபர், கடந்த மாதம் 3ம் தேதி வந்தார். தன் வக்கீல்களுடன் நீதிமன்றத்திற்கு சென்று, பிரிவு 164ன் கீழ், நீதிபதி முன்னிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், 'தர்மஸ்தலா கோவிலில் 1995 - 2012 வரை நான் பணியாற்றிய காலகட்டத்தில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்தேன். புதைக்கப்பட்ட பெண்கள், என் கனவில் தோன்றியதால் மனசாட்சி உறுத்தியது. தற்போது உண்மையை சொல்ல வந்துள்ளேன்' எனக் கூறி, சில எலும்பு கூடுகள், மண்டை ஓடுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இது கர்நாடகாவை மட்டுமின்றி, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா உட்பட சிலரின் அழுத்தத்தால், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு எஸ்.ஐ.டி., அமைத்தது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் 20 பேர் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நேத்ராவதி ஆற்றின் கரையோரம், புகார்தாரர் அடையாளம் காட்டிய இடங்களில் தோண்டப்பட்டன. 17 இடங்களில் தோண்டியபோது இரண்டு இடங்களில் மட்டுமே எலும்புக்கூடுகள் சிக்கின. இவை, ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. * உண்மை இதற்கிடையில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர், ஆளும் காங்., அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனால் விழிப்பிதுங்கிய அரசு, புகார்தாரரிடம் தீவிர விசாரணை நடத்தும்படி எஸ்.ஐ.டி.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவரிடம் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'தர்மஸ்தலா கோவிலில் செய்து வந்த வேலையிலிருந்து விலகி, தமிழகத்துக்கு சென்றுவிட்டேன். 2023 டிசம்பரில் சிலர் என்னை சந்தித்தனர். 'தர்மஸ்தலா கோவில் அருகில், சட்ட விரோதமாக கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, போலீசில் தெரிவிக்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்தனர். நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மண்டை ஓடுகளும், அவர்கள் கொடுத்தது தான்' என கூறி, அதிர்ச்சி அளித்தார். நேற்று முன்தினம் மீண்டும் முகமூடி அணிந்த நபரிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாட்சியாக இருந்த அவரை, வழக்கின் குற்றவாளியாக்கி, நேற்று அவரை கைது செய்தனர். இதற்கிடையில், கைதானவர் பற்றிய ரகசியங்கள் அம்பலமாகி உள்ளன. அவர், மாண்டியா மாவட்டம், சிக்கபள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னய்யா என்பது தெரிய வந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்யப்பட்டது. பின், அவர் பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க எஸ்.ஐ.டி.,க்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதேவேளையில், சின்னையாவின் மூத்த சகோதரரையும், விசாரணைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். * புகார் வாபஸ் இதேபோல், சின்னய்யாவுக்கு முன்பு சுஜாதா பட் என்பவர், 'தன் மகளான அனன்யா பட் காணவில்லை' என, புகார் கூறியிருந்தார். தன் மகள் படத்தை அவர் வெளியிட்டிருந்தார். ஆனால் அது அவரின் மகளே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் சுஜாதா கூறியதும் பொய் என்பது அம்பலமானது. இதுதொடர்பாக சுஜாதா பட்டிடம் கேட்டபோது, 'புகாரை வாபஸ் பெறப்போவதாகவும், எஸ்.ஐ.டி.,யினர் நோட்டீஸ் அனுப்பினால் விளக்கம் அளிப்பேன்' என்றும் கூறியிருந்தார். 'அவ்வாறு புகாரை வாபஸ் வாங்குவதாக எந்த தகவலும் இல்லை' என, எஸ்.ஐ.டி., வட்டாரங்கள் கூறின. அதேவேளையில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் குறித்து அவதுாறாக பேசிய மகேஷ் ஷெட்டி தம்மரோடி, சுஜாதா பட்டிற்கு இரண்டு நாட்கள் அடைக்கலம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், தர்மஸ்தலா கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடந்திருப்பது அம்பலாகி உள்ளது. சாட்சியும், புகார்தாரருமான முகமூடி அணிந்த நபர் கைது செய்யப்பட்டது, உண்மை தான். தற்போது எஸ்.ஐ.டி.,யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு எந்த தகவலையும் தற்போது கூற முடியாது. சுஜாதா பட் வழக்கு குறித்தும் எதையும் பேச முடியாது. எஸ்.ஐ.டி.,யின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரை எதையும் சொல்வதற்கில்லை. - பரமேஸ்வர், மாநில உள்துறை அமைச்சர், காங்., தற்போது உண்மை ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து சுத்தமாக வெளியே வந்துள்ளேன். தற்போது விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு எதுவும் கூற விரும்பவில்லை. உங்களின் ஆசி, நம்பிக்கை தொடர வேண்டும். - வீரேந்திர ஹெக்டே, தர்மாதிகாரி, தர்மஸ்தலா கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

prakashc
ஆக 28, 2025 06:58

வர்றன் பாரு மூக்கை நுழைக்க .


Rathna
ஆக 24, 2025 12:37

மூரக்ஸ் மற்றும் கிரிப்டோகளின் கைவரிசை தான் இது. மெத்த படித்த துறைக்கும் இது தெரியாதது தான் வேடிக்கை. பல நூறு பேரை கொன்றவர்கள் எப்படி மற்றவனை நம்பி உடல்களை ஒப்படைப்பார்கள் அதுவும் புதைக்க சொல்லி??


Sangi Mangi
ஆக 24, 2025 18:56

உன்னை மாதிரி கூறு கேட்ட சங்கி அப்படி தான் பண்ணும்? ரத்னா... நீ ஆணா? பொண்ண? இல்ல அரவனியா? அரவாணியா? ??


Sangi Mangi
ஆக 24, 2025 11:51

பா ஜா காவின் பல பாவ செயல்களில் இதுவும் ஒன்று... தட்ஸால் .....


வாய்மையே வெல்லும்
ஆக 24, 2025 12:14

போர்கிஸ்தான் களியாட்டம் இங்க செல்லுபடியாகாது


Tamilan
ஆக 24, 2025 09:15

இந்துமதவாத அக்கிரமங்களுக்கு ஒரு பலிகடா


subramanian
ஆக 24, 2025 11:14

என்னாங்கடா பொய் பெயரில் ரொம்ப ஆட்டம் போடறீங்க. இந்து மத விரோதிகளால் நாசமா போங்க


Tamilan
ஆக 24, 2025 08:44

அனைத்தையும் மூடி மறைக்க இந்து மதவாதிகள் பேரம் பேசிவிட்டார்கள்


Raman
ஆக 24, 2025 16:44

Anti-national spotted


Mahendran Puru
ஆக 24, 2025 07:10

குற்றச் சாட்டு சுமத்தப் படுவது பாஜக எம்பி யின் உறவினர் மேல். வழக்கு நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது நடந்து விட்டது. உண்மையை வெளிக் கொணர்ந்தவரே கைது. சபாஷ்.


Padmasridharan
ஆக 24, 2025 05:56

ஒருத்தர் சொல்லும் பொய்கள் வேறு யாரையோ எங்கேயோ அழிக்கின்றது. திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்... ஏதோ மக்களுக்கு நல்லது செயவார்கலென்று அதிகாரத்தை அளித்தால் அதிகார துஸ்பிரயோகம் செய்யும் மோசடி ஆட்கள்தான் அதிகமாக உள்ளனர்.... இவர்களெல்லாம் வீட்டு நபர்களுக்கு பாவத்தை சேர்த்து வைக்கக் கூடியவர்கள் சாமி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை