உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெயலலிதாவின் நகைகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தண்டிக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார். 2016ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட்டது. ஆனால், மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0d3dv4oh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவில் நடந்ததால், அவர் பயன்படுத்திய 27 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்கள், நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்தப் பொருட்கள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளன.ஜெயலலிதாவின் இந்த உடைமைகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கக்கோரி, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று (ஜன.,29) நீதிபதி எச்.வி. மோகன் பிறப்பித்துள்ள உத்தரவு:* 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலப் பத்திரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்ல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 பெட்டிகளுடன் வர வேண்டும்.* உரிய வாகன வசதி, பாதுகாப்புடன் வந்து அனைத்து நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து செல்ல வேண்டும். * பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.* சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து நகைகளையும் பிப்ரவரி 14, 15ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ManiK
ஜன 30, 2025 05:02

ஜனாதிபதியிடம் அல்லது ராணுவத்துக்கு ஒப்படைக்கவும். ஜெ அம்மா ஆத்மா ஷாந்தி அடையும். அவர் தேசத்தையும், தமிழகத்தையும் ஒன்றாக பார்த்தவர். ஆனால் இன்னும் ஒரு வருடம் இருக்கும் திமுகவிடம் கொடுக்க வேண்டாம். ஸ்டாலின்க்கு ஸ்வாஹா மந்திரம் நன்றாக தெரியும்.


தாமரை மலர்கிறது
ஜன 30, 2025 00:26

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உதயநிதி வீட்டிற்கு இதை அனுப்பிவிடுவார்கள்.


பாரதி
ஜன 29, 2025 23:57

இவ்வளவு நாள் என் வாழ்க்கையில கோர்ட்டு ஒரு உருப்படியான தீர்ப்பு சொன்னதை காது குளிர கேட்டாச்சு இனிமே நிம்மதியா....


Nandakumar Naidu.
ஜன 29, 2025 21:37

ஸ்வாஹா.


sankaranarayanan
ஜன 29, 2025 21:01

இனி நமது அறநிலை துறை அமைச்சர் அங்கே சென்று எல்லா நகைகளையும் வாங்கி அப்படியே உருக்கி கட்டியாக்கி ஏதாவது ஒரு வங்கியில் வைத்து பணம் வாங்கிவிடுவாரே என்ன செய்வது


Ramesh Sargam
ஜன 29, 2025 20:32

லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்? பேசாமல், நீதிமன்றமே அதை பெற்றுக்கொண்டு, நீதிமன்ற கண்காணிப்பில் மக்களுக்கு தேவையான பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், விளையாட்டு அரங்கங்கள் என்று கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கலாம். அது வழக்கமில்லை. வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் தவறேதும் இல்லையே?


GMM
ஜன 29, 2025 19:07

வழக்கு நிலுவை. வாரிசு இல்லை. உயில் இல்லை. லஞ்சம் / சினிமாவில் நடித்த பணம் என்று பிரிக்க முடியாது. போலீசார், நீதிமன்றம் நிலம், பணம் பொருள் நீண்டகாலம் பாதுகாக்கும் முறை சட்டபடி கிடையாது?. ஏலம் விட்டு, பணத்தை மத்திய வங்கியில் செலுத்த வேண்டும். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைப்பது சரியா? நகை திருடு போகும். நிலம் அபகரிக்க பட்டு விடும். யார் பொறுப்பு ஏற்பர்.


Barakat Ali
ஜன 29, 2025 17:00

திருடனிடம் சாவியைக் கொடுப்பது ன்னா அது என்ன ன்னு தெரியாதவங்க தெரிஞ்சிக்க இங்கே ஒரு உதாரணம் .....


N Annamalai
ஜன 29, 2025 16:43

அரசு பள்ளி மதிய உணவு திட்டம் ,தொட்டில் குழந்தை திட்டம் ,கல்லூரி படிக்கும் பெண்கள் மாத மாத கொடுக்கும் ஆயிரம் ரூபாய் ,ஊனமுற்றவர்களுக்கு கால்கள் ,அனைவருக்கும் இலவச அறுவை சிகிச்சை கண்களுக்கு என அவர் பெயரில் நடத்தலாம் .


Raja
ஜன 29, 2025 16:37

ஆடிய ஆட்டம் என்ன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை