உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகம், கேரளாவில் கோவிட் பாதிப்பு: மத்திய அரசு தகவல்!

தமிழகம், கேரளாவில் கோவிட் பாதிப்பு: மத்திய அரசு தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே கோவிட் பாதிப்பு பதிவாகிறது,'' என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.தென் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: கோவிட் பரவல் அதிகரிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் கோவிட் பாதிப்பு பதிவாகிறது. அதிலும், லேசான பாதிப்புடன், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கண்காணிப்புடன் இருப்பதுடன், பல்வேறு அமைப்புகள் மூலம் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suresh sridharan
மே 25, 2025 08:54

மக்களை பயப்படுத்த வேண்டாம் இந்த கால நிலைக்கு கண்டிப்பாக சளி பிடிக்கும் சுடு தண்ணீர் குடிங்கள் சூடாக சாப்பிடுங்கள் போதும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் வேறொன்றும் வேண்டாம் இருமல் ஒரு குருமிளகு பல்லில் வைத்து கடித்து உமிழ் நீர் இறக்கி கொள்ளுங்கள் காய்ச்சல் இருந்தால் அதிகமாக சுடு தண்ணீர் குடியுங்கள் ½ காய்ச்சல் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்


Srinivasan Narasimhan
மே 25, 2025 03:02

பயப்பட வேண்டாம் ஆனால் அலட்சியம் வேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை