பசுவைக் கொன்றவர் சுட்டுப் பிடிப்பு
மீரட்:பசுவைக் கொன்றவர் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய போது துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் தவுராலா அருகே, சமோலி கிராமத்தைச் சேர்ந்தவர் எஹ்சான். பசு மாட்டைக் கொன்ற வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.விசாரணையின் போது, பிப்ரவரி மாதம் போலீசை சுட்டு விட்டு தப்பியதையும், மெஹர்மதி காட்டில் நாட்டுத் துப்பாக்கியை மறைத்து வைத்து இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தார்.அந்தத் துப்பாக்கியை மீட்க போலீசார் அங்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த எஹ்சான், போலீசை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார்போலீசார் குடுத்த பதிலடியில் எஹ்சான் காலில் குண்டு பாய்ந்து சரிந்தார். சுற்றிவளைத்துக் கைது செய்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்தும் எஹ்சான் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.