உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.ஆர்.பி.எப்., பார்லி., படை வி.ஐ.பி., பிரிவுடன் இணைப்பு

சி.ஆர்.பி.எப்., பார்லி., படை வி.ஐ.பி., பிரிவுடன் இணைப்பு

புதுடில்லி: பார்லிமென்ட் பாதுகாப்பில் இருந்து கடந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்ட சி.ஆர்.பி.எப்., படைப்பிரிவு வி.ஐ.பி., பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டது.பார்லி., உள்ளேயும், வெளியேயும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பார்லி., பாதுகாப்பு பிரிவு பாதுகாப்பு அளித்து வந்தது. 2023 டிச., 13ல், புதிய பார்லி.,யில் உள்ள லோக்சபாவில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இருவர், வண்ண புகைக்குண்டுகளை வீசி முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், லோக்சபாவில் பாதுகாப்பு மீறல் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2024 மே மாதம் பார்லி., பாதுகாப்பில் இருந்து, சி.ஆர்.பி.எப்., படை விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பார்லி.,யில் பாதுகாப்பு வழங்கும் பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., படையின் பார்லி., பாதுகாப்பு பிரிவை, அதன், வி.ஐ.பி., பிரிவில் முறைப்படி இணைத்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, 1,400 வீரர்கள் வி.ஐ.பி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், வி.ஐ.பி., பிரிவில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை, 8,000 ஆக அதிகரித்துள்ளது.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, காங்., பார்லி., குழு தலைவர் சோனியா, அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அவரது சகோதரியும், எம்.பி.,யுமான பிரியங்கா உள்ளிட்ட 200 பேருக்கு, சி.ஆர்.பி.எப்., படையின் வி.ஐ.பி., பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V RAMASWAMY
ஜன 16, 2025 09:51

எந்த மாநிலத்திலும் தற்போது நடப்பது இருக்கும் குறைந்த பக்ஷ காவல் துறையினரை அரசியல்வாதிகள் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் பாதுகாப்புக்கு காவல் துறை போதுமானதாக இல்லை, குற்றங்கள் அதிகரிக்கின்றன. அரசியல்வாதிகள் பாதுகாப்புக்கு அவரவர்களே சொந்தமாக பாதுகாப்பு வைத்துக்கொள்ளட்டும் அந்த செலவை ஒரு வரையறைக்குள் அந்தந்த அரசு ஏற்றுக்கொள்ளட்டும். அல்லது இதற்காக ஒரு தனி அமைப்பு செயல்படட்டும். காவல் துறையினரை மக்கள் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.


Rajan A
ஜன 16, 2025 08:20

Why do you need security for opposition leaders? Govt should explain the threats. Otherwise its one more waste of money


Kasimani Baskaran
ஜன 16, 2025 07:14

பண விரயம்... சோனியா காந்திக்கெல்லாம் என்ன அச்சுறுத்தல் இருந்துவிட முடியும்?


புதிய வீடியோ