உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே அடியாக வீழ்ந்தது கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

ஒரே அடியாக வீழ்ந்தது கச்சா எண்ணெய் விலை: பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

புதுடில்லி: 2021க்கு பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலருக்கும் கீழ் குறைந்தது. ஆனால், பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில்தான் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது.அதாவது, 2021க்கு பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 69.48 டாலராக குறைந்தது. ஆனால், கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில்தான் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

பாமரன்
செப் 11, 2024 22:33

இங்கே கருத்து வாந்தி எடுக்கும் அப்ரசண்டிகளா... ஒரு மேட்டர் மறந்துடாதீங்க... எண்ணெய் நிறுவனங்கள் விற்கும் விலைக்கு மேலேதான் மத்திய மாநில அரசுகள் வரி விதிக்கின்றன... அதாவது பேசிக் ப்ரைசின் மேல்... இங்கே கச்சா எண்ணெய் நுகரும் விலை வெகுவாக குறைந்தும் விற்பனை அதாவது பேசிக் விலையை நிறுவனங்கள் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கின்றன. அதாவது மத்திய மாநில அரசுகள் போடும் வரி அமவுண்டு அப்படியே இருக்குது., அப்ப கச்சா எண்ணெய் விலை சரிவு மூலம் யார் பயனடைகிறார்கள்...புரியுதா... இங்கே முக்கியமான விஷயம் நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை வைத்திருப்பது ரிலையன்ஸ்... புரிஞ்சவன் பிஸ்தா... புரியாதவர்கள் பகோடாஸாக மட்டுமே இருக்க முடியும்...


தாமரை மலர்கிறது
செப் 11, 2024 18:53

பெட்ரோல் டீசலின் விலையை அதிகரிக்க வேண்டும். வண்டிகளால் சுற்றுப்புற சூழ்நிலையின் நுரையீரல் அழுகிபோய்விட்டது.மக்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார்கள். மக்கள் சைக்கிள் உபயோகப்படுத்த வேண்டும். மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, பெட்ரோலின் விலையை அதிகரிப்பது நல்லது.


RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2024 17:59

பெட்ரோல் விலையை குறைச்சா வெட்டிக்கு வண்டிய எடுத்துக்கிட்டு சுத்துறவங்க திருந்திடுவாங்களா ????


venugopal s
செப் 11, 2024 17:57

நமது அதிமேதாவி சங்கிகள் பெட்ரோல் விலை குறைந்தால் மத்திய பாஜக அரசையும் மோடியையும் பாராட்டுவார்கள்,அதே பெட்ரோல் விலை அதிகரித்தால் அது எண்ணெய் கம்பெனிகள் செய்தது ,மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று உருட்டுவார்கள்!


என்றும் இந்தியன்
செப் 11, 2024 17:48

கச்சா எண்ணையிலிருந்து Refinery மூலம் கிடைக்கும் பொருட்கள் Gasoline-Petrol/Diesel-46.6% Jet Fuel : 8.8% Distillate Fuel Oil : 19.8% Residual Fuel Oil : 5.0% LPG:4.1% Other Products like Plastics, etc:15.7% செலவு என்று பார்க்கும் போது இந்த கச்ச என்னை பிரித்தெடுக்க பயன் படுத்தும் முறை யந்திரங்கள் ஊழியர் சம்பளம் ட்ரான்ஸ்போர்ட்டேஷன்ஸ் செலவு என பல செலவு உள்ளது. வெறும் கச்சா எண்ணை விலை குறைப்பு மற்ற செலவுகளை குறைக்காது. சம்பளம் வருடா வருடம் increment ஏறும் ........ஆகவே ஐயோ குய்யோ என்று டப்பா அடிப்பதில் அறிவிலித்தன்மையை மற்றவர்களை எப்போதும் குறை கூறும் தன்மையை தான் காண்பிக்கின்றது


Velan Iyengaar
செப் 11, 2024 21:57

நீங்க சொல்லலை இருக்கும் distillation ஊர் உலகம் அறிந்தது தான் ... நீங்கள் கூறாதது ... இந்த bye-product பட்டியலில் உள்ள பொருட்கள் எல்லாம் 1994 விலைக்கா விற்கிறார்கள் ??அதையும் ஒவ்வொரு மாதமுமோ அல்லது ஒவ்வொரு காலாண்டோ ஏற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள் ... இந்த பொருட்களை கையாளும் நிறுவங்களின் பங்கு விலையும் ஏறிக்கொண்டே தானே இருக்கு ....


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 11, 2024 17:37

கருத்து எழுதியுள்ள கந்தசாமிகளே, என்னுடைய புரிதல் சரிதானா சொல்லுங்களேன். உலக சந்தையில் கச்சா எண்ணை ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் ஏறினால், உடனே நமது ஒன்றிய மைய மத்திய அரசு, டாலருக்கு நிகரான இணையான ரூபாய் விகிதம் என்றெல்லாம் சொல்லி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை இருபத்தைந்து பைசா கூடுதலாக்கிய வரலாறு நிறையவே உண்டு. இப்போது பீப்பாய்க்கு இருபது டாலருக்கும் குறைவாக கச்சா எண்ணை உலக சந்தையில் குறைந்திருக்கும்போது பாதியாவது குறைப்பதுதானே நியாயம்? மன்மோகன் அரசு இருந்தபோது கச்சா எண்ணை உலக சந்தையில் ஒரு பீப்பாய் நூற்று ஐம்பது டாலருக்கு அருகில் இருந்த நிலையில் உள் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு எண்பத்தைந்து ரூபாய் விற்றதை எதிர்த்து பெட்ரோல் விலையைக் குறை என்று இதே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தார்களே


prabhu
செப் 11, 2024 17:02

நீங்கள் ஒன்றிய அரசுக்கு கேள்வி கேட்கலாமே , மற்ற எல்லா விஷயத்துக்கும் சப்போர்ட் பண்றீங்க இதை மட்டும் பொது விஷயமா போடுறீங்க


Apposthalan samlin
செப் 11, 2024 16:46

இதில் கருத்து போடுவார்கள் அநியாயம் குறைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களா பாருங்கள் எல்லோரும் வெளி நாட்டில் வாசிப்பார்களோ ? nalaa முட்டு கொடுக்கிறார்கள் .எப்படி நாடு உருப்படும் ?


ஆரூர் ரங்
செப் 11, 2024 16:38

பெட்ரோல் விலையை மீண்டும் குறைத்தால் எத்தனை பேர் மின்வாகனங்களுக்கு மாற விரும்புவர்? சுற்றுச்சூழல் பற்றிப் பேச ஆளிருக்காது. விரைவில் டெல்லி மாதிரி நாடே புகை மண்டலமாகும்.


Rajarajan
செப் 11, 2024 16:24

நிதர்சனம் என்னவெனில், அப்படி விலையை குறைக்க வாய்ப்பே இல்லை. அந்த சேமிப்பை, அரசு ஊழியருக்கு சம்பள உயர்வு, பஞ்சபடி, சலுகைகள், அடுத்து நிதி கமிஷன், ஓய்வூதிய கூடுதல் படிகள் போன்றவற்றிக்கு சேர்த்துவைத்து விடுவர். இந்தியாவில் / எந்த மாநிலத்திலும், அரசு ஊழியருக்கு செலவும், சேமிப்பும், எதிர்கால செலவுகளும் கணக்கிட்ட பின்னரே, மிச்சம் மீதி வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்கப்படும். தனியார் நிறுவன ஊழியர் / சிறு தொழில் நடத்துவோரை எந்த அரசும் விலைவாசி மற்றும் வரிஉயர்வை பற்றி காதில்கூட வாங்கிக்கொள்ளாது. இவர்களிடம் வாங்கி, அவர்களிடம் கொடுப்பது தான், எந்த அரசின் வேலையும்.


சமீபத்திய செய்தி