உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாக்பூரில் விலக்கி கொள்ளப்பட்டது ஊரடங்கு; இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்

நாக்பூரில் விலக்கி கொள்ளப்பட்டது ஊரடங்கு; இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்; நாக்பூரில் 6 நாட்கள் கழித்து ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.மஹாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நாக்பூரில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.போராட்டத்தின் நீட்சியாக, இஸ்லாமிய மற்றும் ஹிந்து அமைப்புகள் இடையே மோதல் மூண்டு வன்முறையானது.அதைத் தொடர்ந்து, நந்தன்வன், இமாம்பாடா, கோட்வாலி, சக்கர்தாரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந் நிலையில், தேஷில், கணேஷ்பேத், யசோதரா நகர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (மார்ச் 23) பிற்பகல் 3 மணி முதல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக நாக்பூர் போலீஸ் கமிஷனர் ரவிந்தர் சிங்கால் உத்தரவிட்டார். இதையடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பதற்றமாக கருதப்படும் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridhar
மார் 23, 2025 18:57

Unwarranted controversy surrounding aurangazeb's tomb. It has been there for 300 years now. It is historic monument and must be viewed as that only. Don't connect it with religion.


Nandakumar Naidu.
மார் 23, 2025 17:56

தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத சக்திகளிடம் இருந்து ஹிந்துக்கள் பொருட்கள் வாங்குவது மற்றும் வியாபாரத்தை தவிர்க்க வேண்டும். அவர்கள் நம் பாரதத்தின் புற்று நோயின் அடி வேர். முற்றிலும் அகற்றப்பட வேண்டிய தீய சக்திகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை