உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் சைபர் குற்றவாளிகள்!

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் சைபர் குற்றவாளிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 2033ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு லட்சம் கோடி இணையவழி தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.'பிரஹார்' என்ற அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மற்றும் விமான நிலையங்கள் மீது ரகசிய இணைய நிறுவனங்களால் நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள், இந்தியாவில் டிஜிட்டல் சுற்றுச்சூழலின் விரைவான விரிவாக்கத்தின் அபாயங்களுக்கு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளது.இந்தியாவில் 2023ம் ஆண்டு, 7 கோடியே 90 லட்சம் இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 15 சதவீதம் அதிகம். நடப்பாண்டின் முதல் காலாண்டில் 500க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சைபர் கிரிமினல்களால் அதிகளவில் குறிவைக்கப்படும் துறைகளில் வலுவான இணைய பாதுகாப்பு தேவை என்பதை இந்த ஆய்வுகள் உணர்த்துகின்றன. சைபர் குற்றங்களால் இந்தியர்கள் இந்தாண்டில் இதுவரை ஆயிரத்து 750 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழந்திருப்பதாக தேசிய சைபர் கிரைம் இணைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Junior Sankar
நவ 01, 2024 00:11

பலவிதமான பயன்பாட்டு ஆப்களை (App) கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யும்போது பல்வேறு வகையான உரிமைகளை அந்த செயல்களுக்கு அளித்து விடுகிறோம் அதாவது நமது கைப்பேசியில் உள்ள தொடர்பு எண்கள் போட்டோக்கள் வீடியோக்கள் மற்றும் இதர முக்கிய செய்திகளை பார்க்க அதிகாரம் வழங்கி விடுகிறோம். இதனாலேயே பல விதமான சைபர் கிரைம்கள் பெருகி விடுகின்றன. உரிமை பகிர்வு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு போதுமான அளவில் வழங்கப் படவில்லை. இதை தவிர்த்தாலே அதாவது உரிமம் வழங்குவதை (App asssess our files and media while downloading apps in mobile) தவிர்த்தால் பலவிதமான குற்றங்கள் குறையும். Dora Bheem Channel. 


அப்பாவி
அக் 31, 2024 23:25

வேலைவாய்ப்புக்கு பஞ்சமே இல்லை. ஒரு தடவை ஒரு பெரிய அமவுண்ட்டா சுருட்டுனாப் போறும். செட்டில் ஆயிடலாம்.


என்றும் இந்தியன்
அக் 31, 2024 19:50

இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஷரியா சட்டம் நாம் Follow செய்யாததினால். கையை அறு கழுத்தை வெட்டு சட்டம். காரணம் 1 அநீதிமன்றம் 2 போலீஸ் 3 அரசியல் வியாதிகள் சப்போர்ட் இவர்களுக்கு உண்டு. ஒரே சட்டம் " தவறு கண்டேன் சுட்டேன், சொத்து ராசு கருவூலத்திற்கு மாற்றம். அவர்கள் உறவினர்கள் இந்திய குடியுரிமை இழப்பு" இதை Follow செய்தால் ஒரே ஒரு வருடம் ஒருவன் இந்தியாவில் இருக்கமாட்டான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை