மோட்டார் பைக் மோதி சைக்கிளில் சென்றவர் பலி
நரேலா: வடக்கு டில்லியின் நரேலா தொழில் சாலைப் பகுதியில், சைக்கிள் மீது மோட்டார் பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.ஹோலம்பி கலா பதா மோர் அருகே புதன்கிழமை இரவு 9:45 மணியளவில் சைக்கிள் மீது மோட்டார் பைக் ஒன்று மோதியது. இதில் சைக்கிளில் வந்த சம்புநாத் யாதவ், 44, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடன் சைக்கிளில் வந்த இர்சாத், 26, காயமடைந்தார். அவருக்கு, நரேலாவில் உள்ள சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு மாற்றப்ப்டடார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்புநாத் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜஹாங்கிர்புரியில் உள்ள பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனர்.