உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் அடித்த அபாய மணி!

டில்லியில் அடித்த அபாய மணி!

பிரதமர் மோடி ஒரு கொள்கை வைத்துள்ளார். அதாவது, மாநில கவர்னர்கள் எவரையும் சந்திப்பதை தவிர்க்கிறார். 'எந்த பிரச்னையாக இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தியுங்கள்' என, கவர்னர்களிடம் கூறிவிட்டார். முக்கியமான, தலை போகிற பிரச்னை இருந்தால் மட்டுமே கவர்னர்களை பிரதமர் சந்திப்பார்.'ஒரு பக்கம், உத்தர பிரதேச பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னைகள்; இன்னொரு பக்கம் மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் பா.ஜ., கூட்டணியில் பிரச்னைகள் என, கட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், மோடி நேரம் ஒதுக்கி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்தது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது' என்கின்றனர், பா.ஜ.,வினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jyjwxk3u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லிக்கு ஐந்து நாள் பயணமாக வந்த கவர்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததுடன், பிரதமரையும் சந்தித்தார்; இந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் நடைபெற்றதாம்.தமிழக அரசியல் நிலை, கள்ளச்சாராய மரணங்கள், அதன் பின்னணி, போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உட்பட நடக்கும் அரசியல் கொலைகள், மோசமாகும் சட்டம் - ஒழுங்கு என, பல விஷயங்களை பிரதமரிடம் விலாவாரியாக பகிர்ந்து கொண்டாராம் தமிழக கவர்னர்.'அடுத்த மாதம் தமிழகம் வரவிருக்கிறார் மோடி. எனவே, தமிழக கவர்னரிடம் தமிழக அரசியல் நிலை குறித்து விவாதித்தார்' என கூறும் பா.ஜ., தலைவர்கள், 'இந்த சந்திப்பு தி.மு.க.,விற்கு ஒரு அபாய மணி' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Dharmavaan
ஜூலை 28, 2024 07:12

திமுக ஆள தகுதி இழந்து விட்டது டிஸ்மிஸ் செய்வதோடு கட்சி தேசவிரோத பிரிவினைவாத பேச்சுக்காக தடை செய்யப்பட வேண்டும்


RADHAKRISHNAN
ஜூலை 22, 2024 13:57

அபாய மணியல்ல ....


Mani Stapathi
ஜூலை 22, 2024 09:32

சூப்பர் கருத்து


Thiagarajan
ஜூலை 21, 2024 22:40

பயந்துட்டோம்


kumaraj
ஜூலை 21, 2024 22:34

நாங்களும் இவனை பார்த்துக்கொண்டு தான் இருக்கோம் ஒரு கூந்தலையும் பிடுங்க முடியாது


D MANI
ஜூலை 21, 2024 20:33

இதே பொழப்பு உனக்கு...


D MANI
ஜூலை 21, 2024 20:31

ஆமா... அபாய மணி.. உனக்கு இதே பொழப்பு...


Thirumaran S
ஜூலை 21, 2024 20:03

பகல் கனவு...


VENKATESAN V
ஜூலை 21, 2024 12:03

நாற்பதுக்கு நாற்பது நடக்க காரணமே இந்த மாதிரி தேவை இல்லாத செய்திகளை வெளி இடுவது தான்.


Swaminathan L
ஜூலை 21, 2024 10:51

ஒரு அபாயமணியும் இல்லை, அடிக்கப் போவதும் இல்லை. அதிமுக அப்பத்துக்கு திமுக, பாஜக இரண்டுமே ஆசைப்படுவது மட்டுமே தொடரும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை