உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளக்காதலனுடன் சிக்கிய மகள்: இருவரையும் கொன்று கிணற்றில் வீச்சு

கள்ளக்காதலனுடன் சிக்கிய மகள்: இருவரையும் கொன்று கிணற்றில் வீச்சு

நான்டெட்: மஹாராஷ்டிராவில் திருமணமான கள்ளக் காதலியை சந்திக்க, அவரது மாமியார் வீட்டுக்கு சென்ற காதலன் சிக்கினார். இது குறித்து அறிந்து வந்த பெண்ணின் தந்தை, மகள் மற்றும் அவரது கள்ளக்காதலனை அடித்துக் கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசினார். மஹாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் உள்ள காலேகான் கிராமத்தில் வசித்த இளம்பெண் சஞ்சீவனி. இவருக்கு சுதாகர் காமலே என்பவருடன் திருமணமாகி காலே கானில் வசித்தார். இந்நிலையில், அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த லகான் பண்டாரே உடன் சஞ்சீவனிக்கு தகாத உறவு இருந்துள்ளது. நேற்று முன்தினம் சஞ்சீவனியை அவரது மாமியார் வீட்டில் சந்திக்க லகான் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சஞ்சீவனியின் மாமியார், காதலனை பிடி த்து வைத்து, சஞ்சீவனியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பெண்ணின் தந்தை இருவருடன் வந்து, மகள் சஞ்சீவனி மற்றும் காதலன் லகானை மருமகன் கண் எதிரே அடித்துக் கொன்றுள்ளார். பின் இரு உடல்களையும் கிணற்றில் வீசிவிட்டு தப்பினார். இது பற்றிய புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் இருந்து சஞ்சீவனியின் உடலை போலீசார் மீட்டனர். காதலன் லகான் உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சஞ்சீவனியின் தந்தை, கணவர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

chnnsm samy
ஆக 30, 2025 22:40

பரிதாபம் மக்கள்.


Natchimuthu Chithiraisamy
ஆக 29, 2025 11:53

பெண்களே புரிந்து கொள்ளுங்கள்.


VENKATASUBRAMANIAN
ஆக 27, 2025 09:38

இப்போது இது சர்வசாதாரணமாக நடக்கிறது. சீரியல் முக்கியமான காரணம். அதில்தான் கள்ளக்காதல் கொலை கொள்ளை போன்றவைகளை சர்வசாதாரணமாக பெண்கள் செய்கிறார்கள். அப்புறம் எப்படி இளைய சமுதாயம் உருப்படும். இதற்கு சென்ஸார் வேண்டும்.


D Natarajan
ஆக 27, 2025 07:35

கள்ள காதல், திருமணம் ஆன பின் வேறொருவனுடன் தொடர்பு , இவைகள் மிகவும் ஆபத்தானது, தேவையற்றது. விளைவு இதுபோன்ற நிகழ்வுகள். தடுக்கவே முடியாது


raja
ஆக 27, 2025 06:32

பெரியாரின் வழி தோன்றல் அண்ணன் சுனா பானா வீணா பானா இந்த திருட்டு திராவிட காதல் ஆன திருமணம் கடந்த உறவினை ஆதரித்து உடனே ஒரு அறிக்கை விடுவார் பாருங்க...இதுவே விடியல் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் எங்கள் ஊருக்கு வந்து இது போல் செய்ய முடியுமா எண்டெனு அரை கூவல் விடுவார் paarunka...


Abdul Rahim
ஆக 27, 2025 18:10

போடா மெண்டலு


raja
ஆக 29, 2025 08:15

பார்றா ரோஷத்தை...


நிக்கோல்தாம்சன்
ஆக 27, 2025 06:13

என்ன கொடுமை