உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நில முறைகேடு புகார்: சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

நில முறைகேடு புகார்: சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: நில முறைகேடு புகாரில் வழக்குத் தொடர அனுமதி அளித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 2022ம் ஆண்டு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. தன் மனைவிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தியதற்கு பதிலாக, இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சித்தராமையா விளக்கம் அளித்தாலும், கையகப்படுத்திய நிலத்தை விட, அதிக மதிப்பிலான மனைகளை பார்வதிக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர், சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தார். தொடர்ந்து, மைசூரை சேர்ந்த சினேகமயி கிருஷ்ணா என்ற சமூக ஆர்வலரும், முதல்வர் மீது கவர்னிடம் புகார் அளித்தார். ஊழல் தடுப்பு சட்டம் 17வது பிரிவின் கீழ், சித்தராமையாவிடம் விசாரணை நடத்த, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். கர்நாடகா கவர்னரின் உத்தரவுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்தனர். மேலும், 'வரும் 29ம் தேதி வரை கீழமை நீதிமன்றம் எந்த விசாரணையோ, உத்தரவோ பிறப்பிக்க கூடாது' எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராஜ்
ஆக 20, 2024 08:38

சூப்பர் நீதிமன்றங்கள். நீதி துறையில் மாற்றம் வர வில்லை என்றால் இந்தியா இன்னும் கொஞ்சம் வருடங்களில் நாசமாக தான் போகும்


Pandiarajan Thangaraj
ஆக 20, 2024 08:09

நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறி யாகி விட்டது


பேசும் தமிழன்
ஆக 19, 2024 23:05

என்னய்யா உங்க சட்டம்..... தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் ???


sankaranarayanan
ஆக 19, 2024 21:59

நாட்டில் அப்பட்டமான ஊழல் முதல்வர் தரத்தில் நடந்தும் உயர் நீதிமன்ற தானாகவே விசாரிக்காமல் மாநில ஆளுநர் எடுத்த நடவடிக்கைகளுக்கும் மக்கள் எடுத்த நடவடிக்களுக்கும் இடைக்கால தடை விதித்திருப்பது மிகவும் வேதனையாகவே உள்ளது இது இன்னும் இப்படிப்பட்ட ஊழல்களை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது இதுதான் இந்திய நாட்டின் தலைவிதி


அஜேஷ்
ஆக 19, 2024 21:26

சட்டம் ஒரு இருட்டறை. இல்லை. சாக்கடை.


அப்புசாமி
ஆக 19, 2024 21:25

எதுக்கு இடைக்காலத் தடை. சீக்கிரமா வுசாரிச்சு தீர்ப்பு வழங்கினா குறைஞ்சா போயிடுவீங்க? ஏற்கனவே பலமுறை ஃபெயிலான நீதித்துறை திரும்ப கோட் அடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.


nagendhiran
ஆக 19, 2024 21:02

நம்புங்க சட்டம் அனைவருக்கும் சமம் என்று?


Nagarajan D
ஆக 19, 2024 20:54

இந்த இடைக்கால தடைகள் இருக்கும் வரை திருடனுங்களுக்கு கொண்டாட்டம் தான்... நீதியற்ற நீதிமன்றங்கள் தான் குற்றவாளிகளை தூண்டிவிடுகிறது... எவன் குற்றம் செய்திருந்தாலும் தூக்கில் போடப்பட்டால் தான் நியாயம் நிலைக்கும்...நமது நீதிமன்றங்கள் நியாயம் கிடைத்துவிட கூடாது என்று முனைப்புடன் வேலை செய்கிறது.. அந்த வழக்கை லோக் ஆயுக்தா மூலம் தொடுத்தவரை இந்த அரசியல் வியாதி உயிரோடு விடுவானா?


கல்யாணராமன்
ஆக 19, 2024 20:52

எம் ஆர் ராதா ஏதோ சொன்னாரே


Ramesh Sargam
ஆக 19, 2024 19:52

இடைக்காலத்தடை. ஏன் என்றால் அவர் அரசியல்வாதி. ஒரு சாமானியன் என்றால் நமது சட்டமும், நமது நீதிமன்றங்களும் அந்த சாமானியன் மீது நடவடிக்கை எடுக்க இரவோடு இரவாக உத்தரவு பிறப்பிக்கும். வெட்கம். வேதனை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி