உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமிக்க முடிவு

காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமிக்க முடிவு

சென்னை: தமிழக காவல் துறையின் பொறுப்பு டி.ஜி.பி.,யாக, வெங்கட்ராமன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், வரும், 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இவருடன், தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார்.https://www.youtube.com/embed/ubSMM4Ii5YAஇவர்களுக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி, நாளை மாலை, 4:00 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ளதால், புதிய சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.முதல் மூன்று இடங்களில், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.,யாக உள்ள சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரியாக உள்ள டி.ஜி.பி., ராஜீவ் குமார், சென்னை அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள, போலீஸ் அகாடமி இயக்குநர், டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் உள்ளன.இப்பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில், புதிய டி.ஜி.பி.,யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்படவில்லை. இதனால், தற்போது டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன், பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான, இவர் சைபர் குற்றப்பிரிவு உட்பட, பல பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
ஆக 28, 2025 10:34

தற்போது இருப்பவர் கண்ணை மூடி, வாயை பொத்திக் கொண்டிருக்கிறார், அடுத்து காதையும் மூடிக்கொண்டிருப்பவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவர்.


Artist
ஆக 28, 2025 10:23

திராவிட யாரும் கிடைக்கவில்லையா ?


N Sasikumar Yadhav
ஆக 28, 2025 09:15

திருட்டு திராவிட மாடல் செய்யும் களவானித்தனத்துக்கு ஒத்து வருவதைபோல யாரும் செட்டாகவில்லை போலிருக்கிறது அதனால்தான் பொறுப்பு துறப்பு என டிஜிபியை நியமிக்கிறது இந்த மானங்கெட்ட திராவிட மாடல் . ஏற்கனவே சட்டம்ஒழுங்கு சந்தி சிரிக்கிறது இனிமேல் எப்படியோ நாராயணா தமிழகத்தை இந்த திராவிட மாடலிடமிருந்து காப்பாற்று


SUBBU,MADURAI
ஆக 28, 2025 09:11

ஓய்வு பெற்ற பிறகும் சங்கர் ஜிவாலுக்காக புதிதாக வேறு ஒரு பதவியை இந்த திராவிட மாடல் அரசு உருவாக்கிக் கொண்டு இருக்கிறது அந்தப் புதிய பதவியை ஏற்கும் சங்கர் ஜிவால் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறுவார்.


முக்கிய வீடியோ