உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க முடிவு

மைசூரு நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க முடிவு

பெங்களூரு: பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் இயங்கும் வாகனங்களுக்கு வசதியாக, நெடுஞ்சாலை முழுதும் சர்வீஸ் சாலை அமைக்க, என்.ஹெச்.ஏ.ஐ., எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, என்.ஹெச்.ஏ.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு - மைசூரு இடையிலான பயண நேரத்தை குறைக்கவும், இடையூறு இல்லாமல் பயணம் செய்ய வசதியாகவும், 119 கி.மீ., தொலைவிலான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் ரயில் பாதை உட்பட இடையூறுகள் இன்றி பயணம் செய்ய சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை.சர்வீஸ் சாலை இல்லாததால், ஆங்காங்கே நின்று பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் பயணம் செய்ய வாகனங்களின் நேரம் வீணாகிறது. பெங்களூரில் இருந்து, பிடதி, சென்னப்பட்டணா, மத்துார் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு சென்று, 'யு டர்ன்' செய்து வர வேண்டியுள்ளது.இதற்கு தீர்வு காணும் நோக்கில், பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், முழுமையான சர்வீஸ் சாலை அமைக்க, என்.ஹெச்.ஏ.ஐ., திட்டமிட்டுள்ளது. தற்போது சர்வீஸ் சாலை அமைக்க வேண்டிய இடத்தை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. விரைவில் டெண்டர் அழைத்து, பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை