உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுகாதாரத்துறை பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்ப முடிவு

சுகாதாரத்துறை பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்ப முடிவு

பெங்களூரு: ''சுகாதாரம், குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள, 337 சிறப்பு டாக்டர்கள், 250 சாதாரண டாக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.சட்டசபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் பேளூர் கோபால கிருஷ்ணா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:முதுகலை பட்டப்படிப்பு முடித்து, ஓராண்டு கட்டாயமாக அரசு மருத்துவமனை பணிக்கு நியமிக்கப்படுவர். இதன் மூலம் சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும்.

337 சிறப்பு டாக்டர்கள்

சாகரா மருத்துவமனையில், காலியாக உள்ள கண் சிகிச்சை நிபுணர், ரேடியாலஜி வல்லுனர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். சுகாதாரம், குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள, 337 சிறப்பு டாக்டர்கள், 250 சாதாரண டாக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சுகாதாரம், குடும்ப நலத்துறைக்கு உட்பட்ட, அனைத்து மருத்துவமனைகளின் நிர்வகிப்புக்கு, ஆண்டுதோறும் 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அது போதுமானதாக இல்லை. இதை அதிகரிக்கும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மருத்துவமனையில் அனைத்து வசதிகளும், சரியாக இருக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

ஆரம்ப சுகாகார மையம்

தேசிய நகர ஆரோக்கிய திட்டத்தின்படி, நகர்ப்பகுதியில் 2.50 லட்சம் மக்கள்தொகைக்கு, ஒரு நகர சமுதாய சுகாதார மையம் அமைக்க அனுமதி உள்ளது. ஆனால் சுரத்கல் பகுதியில் மக்கள் தொகையே 63,729 ஆக உள்ளது. இங்கு ஆரம்ப சுகாகார மையம் அமைக்க சட்டத்தில் இடமில்லை.ஆரம்ப சுகாதார மையங்களில், 800 பார்மாசிஸ்ட் டெக்னிஷியன்கள் உட்பட, காலி பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவர். அவசர நேரத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்ட மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை அழைத்துச் செல்ல வசதியாக, விதிகள் எளிமையாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை