உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.கடந்த 2022ம் ஆண்டு டிச., 16 ம் தேதி, இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வந்த காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் கருத்து தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதய் சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம்,அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட மறுத்துவிட்டது.இந்நிலையில், லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில், இன்று ராகுல் நேரில் ஆஜரானார். அப்போது, ரூ.20 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கு இருவர் இருவரின் பிணையில் ராகுலுக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்ற கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அலோக் வர்மா ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhakt
ஜூலை 16, 2025 01:54

இது ஒரு குணா கமல்.


Naga Subramanian
ஜூலை 15, 2025 20:39

தவறு செய்யும் ராகுலுக்கு மட்டும் அனைத்திலும் ஜாமீன் அல்லது விடுதலை கிடைத்து விடுகிறது. அத்தகைய மண்ணில் எத்தனையோ அஜித் குமார்களுக்கு மட்டும் ஏனோ சட்டத்தில் விதிவிலக்கு.


Ramesh Sargam
ஜூலை 15, 2025 21:33

சரியாக கூறினீர்கள்.


Ramesh Sargam
ஜூலை 15, 2025 20:21

இந்த ஜாமீன் தீர்ப்பிலிருந்து என்ன தெரிகிறது? தாய் நாட்டையும், நமது ராணுவ வீரர்களையும் எப்படி திட்டினாலும் கூட, நமது நீதிமன்றங்கள் தண்டிக்காது. ஒரு பத்தாயிரமோ, இருபதாயிரமோ பிணைத்தொகை வாங்கிக்கொண்டு, ஜாமீன் கொடுத்து வெளில விட்டுவிடும். தீர்ப்புக்கள் இப்படி இருந்தால் எவர் தான் தவறு செய்யமாட்டார்கள். நீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்புக்களை கடுமையாக்க வேண்டும். அது தவறுசெய்பவருக்கு ஒரு நல்ல பாடத்தையும், புத்திமதியையும் கற்றுத்தரவேண்டும்.


Bhakt
ஜூலை 15, 2025 20:13

சீன கைக்கூலி.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 19:54

விரைவில் தண்டனை உறுதி.


rama adhavan
ஜூலை 15, 2025 19:32

முன் காலத்தில் மன்னர் ஆட்சியில் ராஜ இளவரசர்கள் அராஜகம் செய்த வரலாறு உண்டு. இப்போ ராஜாவும், அவர்கள் செல்வாகும் அடியோடு மறைந்து விட்டது. அதுபோல் இப்போது அராஜகம் செய்வோரும் காலம் மாறும்போது காணாமல் போவார்கள்.


V.Mohan
ஜூலை 15, 2025 18:43

.இந்த மனிதனுக்கு குடும்ப வாரிசு அரசியலால், ஆணவம் தலைக்கேறி இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரையும் ஜனநாயக முறைப்படி மெஜாரிடி எம்பிக்கள் ஆதரவில் ஆட்சி அமைத்த பாஜக வையும் சகட்டு மேனிக்கு ஆங்காரத்துடன் விமரிசனம் என்ற பெயரில் தவறாக சித்தரிப்பது அநாகரிக எதிர்ப்பாகும். ஒரு நகராட்சியைக் கூட நிர்வாகம் செய்யத் திறமை பெற்றிராத அடிப்படை தலைமைப் பண்புகள் இல்லாத ராகுல் பெரோஸ்கான் காந்தி , நாட்டின் ராணுவத்தையும் ஆட்சியாளர்களையும் சேர்த்து அவதூறு பேசுவது சுத்த அபத்தம்.


பேசும் தமிழன்
ஜூலை 15, 2025 18:40

இப்படியே ஜாமின் வழங்கி கொண்டு இருந்தால்.... இத்தாலி பப்பு.... நாட்டை பற்றி கேவலமாக பேசுவதை எப்படி நிறுத்துவார்.... எப்படி திருந்துவார் ???


V Venkatachalam
ஜூலை 15, 2025 18:35

கோர்ட்டில் இருக்கும் நீதி அரசர்களுக்கு நாட்டின் அன்றாட நிகழ்வுகள் பற்றி தெரியாதா? இந்த பப்பு என்ன பேசுகிறான் நாட்டின் கவுரவத்தை கேலி செய்கிறான் இறையாண்மை பற்றி கேவலமா பேசுகிறான் என்பதையெல்லாம் நீதி அரசர்களுக்கு வக்கீல்கள் எடுத்து சொன்னால்தான் தெரியுமா? இந்திய மண்ணில் இருந்து கொண்டு இந்திய உணவை உண்டு வாழும் அவர்களுக்கும் தேச பக்தி இருக்கத்தானே வேணும். அப்படி இருக்கும் போது இவர்கள் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறார்கள்? இந்த ஜாமீன் இவனுக்கு மேலும் மேலும் அரக்க தனத்தை வளர்க்கவே உதவும். இந்த விஷயத்தை ராணுவ கோர்ட்டுக்கு மாற்றம் செய்ய முடியாதா?


சிந்தனை
ஜூலை 15, 2025 18:19

கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய நீதிமன்றத்திற்கு வேலை என்னவென்றால் அப்பாவி ஏமாளி மக்கள் தெரியாமல் செய்த பிழைக்கும் பெரிய தண்டனை கொடுப்பது பெரிய திருடர்களுக்கு ஜாமீன் கொடுப்பதும் விடுதலை கொடுப்பதும் நாடு நல்லா உருப்படும் திருடர்கள் நல்லாயிருக்கும் விதத்தில் நீதிபதிகளும் நல்லா இருப்பார்கள்


சமீபத்திய செய்தி