உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ., நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.2018ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பெங்களூரு வந்த ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதனை எதிர்த்து பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த பிப்.,20ம் தேதி இந்த வழக்கில் ராகுல் ஆஜராகி இருந்தார். மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.நீதிமன்றத்தில் ராகுல் இன்று( ஜூலை 26) மீண்டும் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு வழக்கு ஆக.,12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜூலை 26, 2024 17:36

இந்திய நீதிமன்றங்களில் ராகுல் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? ஒரு வழக்கிலாவது தண்டனை கிடைத்து சிறை சென்றாரா?


Dharmavaan
ஜூலை 26, 2024 16:20

திருத்துவது யார் மற்றவருக்கு புத்தி சொல்ல என்ன அருகதை அதற்கு இருக்கு


G Mahalingam
ஜூலை 26, 2024 14:43

கடைசியில் தண்டனை இவர்களுக்கு சத்தியமாக கிடைக்காது. ராகுல் மீது சுமார் ,15 வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு முடிய ராகுலுக்கு 70 வயது ஆகி விடும்.


kumarkv
ஜூலை 26, 2024 14:24

இவரைஎல்லாம் தலைவர் ஒரு கட்சி சொன்னால் அந்த கட்சி எப்படி உருப்படும்


RAAJ68
ஜூலை 26, 2024 14:18

ஒத்தி வைப்பதற்கு எதற்கு விசாரணை ? மறுபடியும் ஒத்தி வைப்பீர்கள் . எப்போதுதான் வழக்கு முடியும்?


vadivelu
ஜூலை 26, 2024 13:55

அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். தலைவன் தன நடத்தை, பேச்சு, நாகரீகம், கருத்துக்கள் அனைத்தும் மக்களால் போற்றப்படும் வகையில் இருக்குமாரு பார்த்து கொள்ள வேண்டும். மெத்த படித்த தலைவர்களும் கூட பார்லியமென்டில் வாய்க்கு வந்த படி பேசுவதும், அலறுவதும், அநாகரீகமாக நடந்து கொள்வதும் கேவலமாக தோன்றுகிறது. சில தலைவர்கள் பொது வெளியில் அவதூறு பேசுவதை ரசிப்பதும் தவிர்க்க பட வேண்டும்.


SUBRAMANIAN P
ஜூலை 26, 2024 13:34

2018 ல் நடந்த சம்பவத்திற்கு இப்போ வழக்கு நடக்கிறது ஏழு வருஷம் கழித்தும் . வெளங்கிரும்.


Nandakumar Naidu.
ஜூலை 26, 2024 13:32

இவருடைய கட்சி நாட்டிற்கும், வீட்டிற்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும்.


Indian
ஜூலை 26, 2024 17:19

வந்தேறிகளால் ஏற்படும் கேடுகளை விடவா ?


பேசும் தமிழன்
ஜூலை 26, 2024 12:41

வாய்க்கு வந்தபடி உளறி கொட்ட வேண்டியது.... பிறகு மன்னிப்பு கேட்க வேண்டியது.... இதே பிழைப்பாக போய் விட்டது


Senthoora
ஜூலை 26, 2024 13:05

இவர்மட்டும எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான், நாமா தான் காணாத்தமாதிரிபோகனும். சிலர் தமிழ்நாடுவந்த தமிழ் தைப்பிள்ளை, கர்நாடகாவுக்கு போனால் அங்கே தெலுங்கு தாய், பிகாருக்குப்போனால் அங்கேயும் அதேதான், அஜஸ்ட்பண்ணனும் நாம.


மேலும் செய்திகள்