உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழை மாணவர்களுக்கு எ.கே.ஜி டூ பி.ஜி வரை இலவச கல்வி , நிதியுதவி: டில்லியில் பா.ஜ., தாராள வாக்குறுதி

ஏழை மாணவர்களுக்கு எ.கே.ஜி டூ பி.ஜி வரை இலவச கல்வி , நிதியுதவி: டில்லியில் பா.ஜ., தாராள வாக்குறுதி

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, நிதியுதவி வழங்கப்படும் என வாக்குறுதிகள் அறிவித்துள்ளது.மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.,5ல் ஒரே கட்டமாக தேர்தலும், பிப்.,8 ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதியை அறிவித்து உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jhzmpmxz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (ஜன.,21) பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு: * ஏழை மாணவர்களுக்கு எல்.கே.ஜி., முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.* ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு,*போட்டி தேர்வர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.* ஆட்டோ, டாக்ஸி நல வாரியம்.* பட்டியலின ஜாதி மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு பா.ஜ., அறிவித்துள்ளது.ஏற்கனவே, பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ரூ.500 மானிய விலையில் காஸ் சிலிண்டர், 60-70 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.2,500 பென்சன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன், கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம் நிதி என பா.ஜ., அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 21, 2025 21:37

பாஜக கொத்தடிமைகள் மற்றும் என் Fanclub இன்று இந்த பக்கமே வர மாட்டார்கள். தேர்தல் ஜூம்லா வில் பாஜக வை மிஞ்சவே முடியாது. சட்டிஸ்கரில், தேர்தலுக்கு முன்பு , ஹோலி க்கு இலவச கேஸ் சிலிண்டர் என்று சொன்னார்கள். தரவில்லை. யாரும் இதெல்லாம் பேச மாட்டார்கள். கொத்தடிமைகளுக்கு டாஸ்மாக், திராவிட மாடல், விடியல், உதய்.. இவ்வளவு தான் political vocabulary.


Mario
ஜன 21, 2025 18:13

அந்த 15 லட்சம் மாதிரி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 21, 2025 21:10

இந்தி படிடா பரமான்னு இதுக்குத்தான் சொன்னது....இங்க தமிழே தொந்தரவு இதுல இந்தி படிக்க சொன்னா??? 40 பேர் ஏன் தேர்ந்தெடுத்தோம்னு தமிழக மக்களுக்கு தெரியல....நம்ம ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னு MPகளுக்கும் புரியல....அந்த 40 பேருக்கும் இந்தி எவ்வளவு முக்கியமுன்னு மக்களுக்கு சொல்ல தைரியமில்ல....!!!


Priyan Vadanad
ஜன 21, 2025 14:33

தேர்தல் வாக்குறுதிகள் என்பதை தேர்தல் பொய்கள் என்று சொல்லலாம். இப்படி பொய்களை சொல்வதில் முதல் பரிசு பாஜகவுக்கே.


Priyan Vadanad
ஜன 21, 2025 14:30

பாவம் வரி கட்டுபவர்கள்.


Priyan Vadanad
ஜன 21, 2025 14:28

மக்களை கசக்கி பிழிந்த கொள்ளையடிக்கப்பட்ட வரிக்கு ஏதாவது "வரிஏய்ப்பு" வேண்டுமே


புதிய வீடியோ