மேலும் செய்திகள்
கேரளாவில் ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: கடத்தல் குருவிகள் கைது
3 hour(s) ago | 2
சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல்!
4 hour(s) ago | 10
புதுடில்லி; டில்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பரிதாபத்தைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவரை என்ஐஏ படையினர் கைது செய்தனர்.டில்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது.தற்போது, பரிதாபாத்தின் தௌஜ் பகுதியைச் சேர்ந்த ஷபீர் என்ற டிரைவரை என்ஐஏ கைது செய்துள்ளனர். அவரது வீட்டிலிருந்து ஒரு கிரைண்டரை ஆய்வு செய்தபோது அதில் யூரியாவை அரைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டாக்டர் முசம்மில் யூரியாவை அரைத்தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.அங்கிருந்து 358 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பின்னர் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் இருந்து திருடப்பட்ட ரசாயனங்களைக் கலந்து வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 hour(s) ago | 2
4 hour(s) ago | 10