உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: லக்னோ டாக்டர் கைது

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: லக்னோ டாக்டர் கைது

லக்னோ : டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த டாக்டர் பர்வேஷ் அன்சாரி(41) என்பவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியதாக லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t3baraep&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஷாகீன் ஷாகித்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரி என்ற டாக்டரையும் உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், உ.பி., மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர். ' தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்ததில் பர்வேஷ் அன்சாரிக்கு முக்கிய பங்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.

யார் இவர்

இந்த அன்சாரி, லக்னோவில் கடந்த 2011 ல் எம்பிபிஎஸ் முடித்தார். பிறகு 2015ம் ஆண்டு ஆக்ராவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்டி முடித்தார். பிறகு, 2021 வரை லக்னோவில் உள்ள தனியார் பல்கலையில் படித்து வந்தார். வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் காஷ்மீர் டாக்டர் அதீல் கைது செய்யப்பட்ட நவ.,6க்கு முதல் நாள் இவர், ராஜினாமா செய்தார். அன்சாரி தனியாக வீடு ஒன்று வாங்கியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சோதனை

அந்த வீட்டில் கடந்த நேற்று முன்தினம்(நவ.,11) முதல் 12 வரை பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்அதில்மொபைல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள்மின்சார சாதனங்கள் மற்றும் லேப்டாப்கள்முக்கி ஆவணங்கள்கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த தூசி நிறைந்த பர்னீச்சர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத கார்கள் உள்ளிட்டவை இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.டில்லி செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் இவருக்கு உள்ள பங்கு குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Srinivasan Narasimhan
நவ 14, 2025 05:08

படிப்புக்கும் செய்யும் குற்றத்துக்கும் ஒரு சம்பந்தம் இல்லை.


Kasimani Baskaran
நவ 14, 2025 04:15

நாட்டுப்பற்று பள்ளியில் சொல்லிக்கொடுக்காமல் தானே வந்துவிடாது.


சிந்தனை
நவ 13, 2025 20:41

நமது கல்வித் திட்டம் ஏதோ பாடங்களை மனப்பாடம் பண்ண வைக்கிறது தவிர நல்லவர்களை நேர்மையானவர்களை பண்பு உள்ளவர்களை உருவாக்குவது இல்லை? இது விரைவில் சீர் செய்யப்பட வேண்டும்


Raman
நவ 13, 2025 22:06

Ours ok.. Mention about madarasa schools. . They are absolute dangers


Palanisamy Sekar
நவ 13, 2025 20:23

இனி எவனும் இந்த கும்பல்களை நம்பி இவர்களிடம் வைத்தியம் பார்க்க செல்ல மாட்டார்கள். கொடூரமான இதயம் கொண்ட சண்டாளர்களை சதிகாரர்களை கற்களால் அடித்தே கொல்லனும் . எதற்கு படித்தார்கள்? பெத்தவங்களையும் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். வயதானவர்களோ அல்லது இயலாத நபர்களோ யாராக இருந்தாலும் இவனை பெற்றதற்கு தணடனையை அனுப்பிவைத்த தீரணும்


gopalakrishnan
நவ 13, 2025 20:15

இவனுக்கு என்ன அவர் இவர் என்ற மரியாதை.


V K
நவ 13, 2025 19:50

நம்ம ஊர் டாக்டர் கிட்னி திருடன் இன்னுமும் கைது செய்யவில்லை


தமிழ்வேள்
நவ 13, 2025 19:39

இதனையே காரணமாக கொண்டு செக்யூரிட்டி எமர்ஜென்சி டிக்ளேர் செய்து, பின்னர் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக செய்ய வேண்டும்... இஸ்லாம் மதத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதோடு, அம்மக்கள் தமது தேசபக்தியை நிரூபிப்பது கடமையாக்கி பிறகு குறைந்த பட்ச உரிமைகள் தரலாம்... மதரஸாக்கள் முற்றிலும் தடை செய்ய பட வேண்டியவை..பயன்கள் தடை செய்ய வேண்டும்... இந்த நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எல்லாத் தரப்பினரும் ஆதரவு தருவதும் தன்னால் நிகழும்...


வாய்மையே வெல்லும்
நவ 13, 2025 21:54

இனிமேல் உம்முடைய பெயர் "தேசபக்தர் தமிழவேள்" என அழைப்பதே சால சிறந்தது சாரே ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை