உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு

டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி தலைமை செயலாளர் நரேஷ்குமார் பதவியை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தலைமைச் செயலராக 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான நரேஷ் குமார் உள்ளார். இவரது பதவிக்காலம் கடந்த 2023 நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. அப்போது அவரது பணிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது பணிக்காலம் வரும் மே. 31 வரை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில் நரேஷ்குமாரின் பணி காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைவதால், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நரேஷ்குமார் வரும் ஆகஸ்ட் மாதம் வரை டில்லி தலைமை செயலராக நீடிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 29, 2024 06:06

சோ, நூற்று முப்பது கோடியில் இவர் அளவுக்கு ஒருவர் கூட திறமையானவர் இல்லை என்பது வேதனைதான். இவ்வளவு நாளாக அறுத்துத் தள்ள முடியாததை இந்த மூன்று மாதத்தில் இவர் அறுத்துத் தள்ளி விடுவார் என்று நம்புவோம்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ