உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலை!

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலை!

தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது; ஜூன் 2ல் சிறைக்கு திரும்புமாறு நிபந்தனை விதித்தது. டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு 25ம் தேதி தேர்தல் நடக்கிறது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uak7k1rc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தவறான முன்மாதிரி

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் கைதாகி, 50 நாட்களாக சிறையில் இருப்பதால், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரம் டல்லடிக்கிறது. தேர்தல் பிரசாரம் செய்ய வசதியாக அவருக்கு இடைக்கால ஜாமினாவது வழங்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனு போடப்பட்டது. ஜாமின் வழங்குவதை மத்திய அரசின் அமலாக்கத் துறை ஆட்சேபித்தது. 'தேர்தல் பிரசாரம் செய்வது அடிப்படை உரிமை கிடையாது. அரசியல்வாதி என்பதால் சலுகை காட்ட சட்டத்தில் இடம் கிடையாது. ஜாமின் கொடுத்தால் அது தவறான முன்மாதிரி ஆகிவிடும்' என்று கடுமையாக எதிர்த்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா நேற்று வழங்கிய தீர்ப்பு:கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. ஆனால், அவர் தண்டிக்கப்படவில்லை. அவருக்கு குற்ற பின்னணி கிடையாது. அவரால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இல்லை.தவிர, அவரை கைது செய்தது செல்லாது என இதே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்காக அவர் கேட்கும் இடைக்கால ஜாமினை அப்படியே நிராகரிக்க முடியாது.தேர்தலை காரணம் காட்டி அரசியல்வாதி ஜாமின் கேட்பதை அனுமதித்தால், அறுவடையை காரணம் காட்டி விவசாயி கேட்கலாம். தொழில் நஷ்டத்தை காரணம் காட்டி பிசினஸ்மேன் கேட்கலாம் என்று அமலாக்கத் துறை வாதிட்டதை ஏற்க முடியாது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலை அறுவடை, வணிகத்துடன் ஒப்பிட முடியாது.ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மைகளை பரிசீலித்து இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில், கெஜ்ரிவால் வாதங்கள் ஏற்புடையதாக உள்ளன.

முதல்வர் பணி கூடாது

அதன் அடிப்படையில் அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்குகிறோம். ஜூன் 2ம் தேதி அவர் சரண் அடைந்து சிறைக்கு திரும்ப வேண்டும். ஜாமினில் வெளியே இருக்கும்போது கெஜ்ரிவால் முதல்வராக பணி செய்யக்கூடாது; கோப்பு களில் கையெழுத்திடக் கூடாது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க கூடாது. சாட்சிகளை சந்திக்கக்கூடாது. லோக்சபா தேர்தலின் முக்கியத்துவத்தை கருதியே ஜாமின் வழங்கப்படுகிறது. இது, அவர் அரசியல்வாதி என்பதற்காக வழங்கும் சலுகை அல்ல. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதையடுத்து, திஹார் சிறையில் இருந்து மாலையில் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். வெளியே திரண்டிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அவரை வரவேற்றனர். கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை, 'இண்டியா' கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர். ஜாமின் கிடைத்து விட்டதால் கெஜ்ரிவால் நிரபராதி ஆகிவிடவில்லை என பா.ஜ., கூறியுள்ளது. இன்று முதல் டில்லியில் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நான் ஜாமினில் வெளியே வர பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. உங்களால் இன்னும் வலிமை அடைகிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக இன்னும் உறுதியாக போராடுவேன். 140 கோடி மக்களும் என்னுடன் போராட வேண்டும்.அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர் - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

M Ramachandran
மே 11, 2024 20:25

கெட்ட செய்தி???


M Ramachandran
மே 11, 2024 20:17

வேண்டாத வேலை


p.s.mahadevan
மே 11, 2024 12:42

தவறான முன் உதாரணங்களை உச்ச நீதி மன்றம் உருவாக்கு கிறது இடியின் அனைத்து முயற்சிகளும் உழைப்பும் வீணடிக்கப் பட்டுள்ளது வருந்த் தக்கது


ram
மே 11, 2024 12:28

தேச துரோகி இவர் ஜெயித்த பிறகு நடந்த கலவரத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டார்கள்/கொலை செய்ய பட்டர்கள் இவர்குக்கு இப்போது சர்க்கரை வியாதி கிடையாதா என்ன ஒரு நடிப்பு, இவர் நடிப்புக்கு உச்ச நீதிமன்றம் தலை சாய்ந்தது இவரை கொண்டுவந்த அண்ணா ஹசாரேயை சொல்லணும் ஊழலை ஓழிப்பேன் என்று சொல்லிக்கொண்டு ஊழலின் மொத்த வடிவமே இவர்தான் வடக்கின் கட்டுமரம்


M S RAGHUNATHAN
மே 11, 2024 11:41

The contention of SC that Kejriwal is not a habitual offender is unaccep Any one who gets caught by authorities will always claim that this is the first crime or mistake he did Actually, he has been booked for the first time is the correct situation Suppose an official is arrested while accepting a bribe and if he claims it is his first offence, will anybody accept? Will courts accept that argument


M S RAGHUNATHAN
மே 11, 2024 11:36

நீதிபதிகள் கருத்து ஏற்பு உடையதாக இல்லை கெஜ்ரிவால் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு பெயில் என்றால், சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளுக்கும் தேர்தலில் வாக்கு அளிக்க ஏன் உச்ச நீதி மன்றம் அனைத்து கைதிகளுக்கும் பெயில் தரக் கூடாது நாட்டில் அனைவரும் சமம் ஆனால் அரசியல் வாதிகள் சற்று மேலே என்று உச்ச நீதிமன்றம் சொல்லலாமா?


Shankar
மே 11, 2024 11:21

இது தான் ஜனநாயகமா ? இதுபோன்று ஒரு ஜாமீனை சாதாரண மனிதனுக்கு கிடைக்குமா? இருப்பவனுக்கு ஒரு சட்டம், இல்லாதவனுக்கு ஒரு சட்டமா?


ayen
மே 11, 2024 15:35

பணம் இருப்பவர் பல நூறு கோடி கொடுத்து ஜாமின் வாங்குவார், சாதாரன மக்களால் முடியுமா?. நீதிபதிகள் பணத்திற்காக நீதி வழங்கினால் இப்படி தான் இருக்கும்.


ஆரூர் ரங்
மே 11, 2024 11:20

. ஊழல்வாதிகளுக்கு விடுதலை அளித்து ஊக்குவிப்பது இந்தக் காலம்.


ஆரூர் ரங்
மே 11, 2024 10:48

1.கேட்காத ஜாமீனையும் அளிக்கும் பெரிய மனது சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு. 2. அரசு ஆவணம் எதிலும் எதிலும் கையெழுத்து போடக் கூடாது என உத்தரவு. ஏற்கனவே அவருக்கு இலாகா எதுவும் இல்லாததால் கையெழுத்து போடுற வேலையில்லை. இது கூட கோர்ட் க்கு தெரியாதா?


S. Gopalakrishnan
மே 11, 2024 10:30

இதே நீதிமன்றங்கள், ஊழலாகப்பட்டது தேசத்திற்கு எதிரான தீவிரவாதம் என்று கூறின. தற்போது இவரால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகின்றன. சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால விடுதலை செய்து வழக்கை முடித்து விடலாம்.


மேலும் செய்திகள்