UPDATED : மே 04, 2025 08:20 AM | ADDED : மே 04, 2025 04:25 AM
புதுடில்லி: தமிழக பா.ஜ.,
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், சமீபத்தில் டில்லி வந்து
பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு காளை மாடல் ஒன்றை
பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.இதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த
மோடி, 'இதை பிரதமர் அருங்காட்சியகத்தில் வைப்பேன்' என்றாராம். பின், தமிழக
அரசியல் நிலை குறித்து அவரிடம் விவாதித்தாராம். 'தடை செய்யப்பட்ட
ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தது நாம்தான் என, தமிழகம் முழுதும்
பிரசாரம் செய்யுங்கள். அத்துடன், காங்கிரஸ் எப்படி ஜல்லிக்கட்டை
எதிர்த்தது, 'ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு' என, அப்போதைய
காங்., அமைச்சர் ஒருவர் கூறியதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்' என,
நாகேந்திரனிடம் கூறினாராம் மோடி.ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர
பன்னீர்செல்வமும், பழனிசாமியும் எப்படி உதவினர் என்பதையும் நினைவு
கூர்ந்தாராம் மோடி. காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜெய்ராம்
ரமேஷ், ஜல்லிக்கட்டை எதிர்த்து பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.