உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பேத்கர் பூங்காவில் கட்டடம் இடிப்பு

அம்பேத்கர் பூங்காவில் கட்டடம் இடிப்பு

தங்கவயல்: அம்பேத்கர் பூங்காவில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டது.ராபர்ட்சன்பேட்டை நீதிமன்றம் அருகில் உள்ள அம்பேத்கர் பூங்காவில் பழைய கட்டடம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இக்கட்டடம் சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்தது. சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து நேற்று காலை, நகராட்சி ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தை கொண்டு வந்து கட்டடத்தை இடித்துத் தள்ளினர்.ஏற்கனவே அம்பேத்கர் பூங்காவில் எந்த கட்டடமும் இருக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ