உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிக்கு உதவிய ஏ.எஸ்.ஐ., மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு

பயங்கரவாதிக்கு உதவிய ஏ.எஸ்.ஐ., மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு : பயங்கரவாதிக்கு உதவியதாக கைதான ஏ.எஸ்.ஐ., ஷான் பாஷா மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தெரிவித்தார்.பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி நசீருக்கு உதவி செய்ததாக, சிறையின் மனநல மருத்துவர் நாகராஜ், சிறை ஏ.எஸ்.ஐ., ஷான் பாஷா, பயங்கரவாதி ஜுனைத் அகமது தாய் அனீஸ் பாத்திமா ஆகிய மூன்று பேரை என்.ஐ.ஏ., கைது செய்து விசாரிக்கிறது.இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:சிறையில் இருக்கும் பயங்கரவாதி நசீருக்கு உதவிய, சிறை ஏ.எஸ்.ஐ., ஷான் பாஷா மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை எங்களுக்கு கிடைத்ததும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு முடிவு செய்யும்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில், தலைமறைவாக இருந்த அபுபக்கர் சித்திக்கை, தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.இவருக்கு பெங்களூரு பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது.இதனால், அபுபக்கர் சித்திக் குறித்து, நம் மாநில பயங்கரவாத தடுப்பு படையினர், தமிழக போலீசாரிடம் இருந்து தகவல் பெற்றுள்ளனர். விரைவில் அவரை இங்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை