உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்

மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90 சதவீத மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் இரண்டு முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக்கோரி பிரதமர் மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.இது தொடர்பாக அவர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தலித், எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. பீஹாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதிக்கு சமீபத்தில் சென்ற போது, ஒரு அறையை 6 - 7 மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை பார்த்தேன். சுகாதாரமற்ற கழிப்பறைகள், பாதுகாப்பற்ற குடிநீர், மெஸ், நூலக வசதிகள் இல்லாதது, இணைய வசதி கிடைக்கவில்லை என மாணவர்கள் புகார் அளித்தனர்.இரண்டாவதாக, விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 10ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தோல்வி அடைந்த திட்டமாக உள்ளது. பீஹாரில், இதற்கான இணையதளம் கடந்த 3 ஆண்டாக செயல்படவில்லை. 2021 -2022 ல் இருந்து மாணவர்களுக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை.உதவித்தொகை பெறும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. 2022 -23ம் நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1. 36 லட்சம் ஆக இருந்தது. இது 2023 - 24 ம் நிதியாண்டில் 69 ஆயிரமாக குறைந்தது. உதவித்தொகை குறைந்த அளவிலேயே உள்ளதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.இந்த பிரச்னைகள் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இதனை சரி செய்ய உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன். தலித்கள், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினர், ஒபிசி பிரிவினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகளை ஆய்வு செய்து நல்ல உள்கட்டமைப்பு, சுகாதாரம், உணவு மற்றும் கல்வி வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய போதுமான அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டும். 10-ம் வகுப்புக்குப் பிறகு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை சரியான நேரத்தில் வழங்கவும், அதனை அதிகரிக்கவும், மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றவும் வேண்டும்.விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னேறாவிட்டால் இந்தியா முன்னேற முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 23:18

இந்த பப்பு இந்தியாவிற்கு எதிராக வெளிநாடுகளில் சென்று பேசுவது வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள் பதிவிடுவது போன்ற செயல்கள் செய்வதை நிறுத்தினாலே மாணவர்களுக்கு இந்திய அரசு நிறைய செய்ய முடியும். இவரது பொய் பிரச்சாரத்தை சரி செய்ய இந்திய அரசு பல அரசு அதிகாரிகள் மற்றும் மந்திரிகளை அவ்வப்போது அந்த அந்த நாட்டுக்கு அனுப்பி உண்மை நிலவரத்தை எடுத்துரைத்து இந்திய எதிர்ப்பு உணர்வை அழிக்க கோடி கணக்கில் மத்திய அரசு செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆகவே காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்த பப்பு பப்பு குடும்பத்தார் இண்டி கூட்டணி தலைவர்கள் இந்திய எதிர்ப்பு நிலையை கைவிட்டு தேச பற்றினை வளர்த்து கொண்டால் போதும் பில்லியன் கணக்கான டாலர் தொகையை நம்மால் சேமிக்க முடியும். அதனை கல்விக்கு மக்களுக்கு செலவு செய்யலாம். ஆக பப்பு மனம் திருந்தினால் மாணவர்களுக்கு நன்மையே.


nagendhiran
ஜூன் 11, 2025 21:22

50 ஆணடூ்கள்"ஆண்ட பப்பு கூட்டம் என்ன செய்தது?


V.Mohan
ஜூன் 11, 2025 20:41

ராகுல் பப்புஜி அவர்களே உங்களது எண்ணம் சரியாக இருந்தாலும் யாரிடம் அதை சொல்ல வேண்டுமோ அங்கே தானே சொல்ல வேண்டும் உங்களது இண்டி கூட்டணியில் உள்ள திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டிலும், உங்களது கட்சி ஆட்சி நடத்தும் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் எஸ். சி, எஸ்.டி க்கான விடுதிகள் எந்த லட்சணத்தில் நடக்கின்றன என்பதை தயவு செய்து ஆய்வு செய்து சூப்பரான வெள்ளை அறிக்கை வெளியிடலாமே அது போகட்டும், இளநிலைக்கல்வி வரையில் மாநிலப்பட்டியலில் தானே உள்ளது?? ஏன் அதை சிறப்பாக செய்யக்கூடாது??? திமுக அரசு மோடி அரசு கல்விக்கு பணம் தராமல் ஏமாற்றுகிறது என ஊளையிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான விடுதிகள் கல்வி வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தினால் அவற்றை மாநில அரசு சரிவர நடத்துவார்கள் என்பதற்கு ராகுல்ஜி உத்தரவாதம் தருவாரா? இப்போதே யூஜிசி இடம் உயர்கல்விக்கான மான்யம் வாங்கிக் கொண்டு, தங்களை எந்த வித கேள்வியும் கேட்க கூடாது எனச் சொல்கிறார்கள் மாநில அரசுகளை ஆளும் எதிர்கட்சிகள். இந்த நிலையில் உங்களது கோரிக்கையை எப்படி பரிசீலிப்பார்கள் ????


Ramesh Sargam
ஜூன் 11, 2025 19:47

நாளுக்கு நாள் இவர் பிரச்சினையே பெரிய பிரச்சினையா போச்சே...


பேசும் தமிழன்
ஜூன் 11, 2025 18:45

பப்பு அனைத்துக்கும் மோடி அவர்கள் தீர்வு காண வேண்டும் என்றால்..... நீங்கள்..... உங்கள் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ???


Bhakt
ஜூன் 11, 2025 18:37

இந்த சீன கைக்கூலி மேல் ஏன் நடவடிக்கை பாயவில்லை?


Sudha
ஜூன் 11, 2025 18:27

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், மாநில அளவிலும், மத்திய அளவிலும் கல்வி மற்றும் தாழ்த்த பட்டோர் அமைச் சகங்கள் உள்ளன. அங்கே ivar ஒரு கடிதம் கொடுக்கலாம்.


Narasimhan
ஜூன் 11, 2025 17:59

மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவன் மாணவர்களை பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்.


Ganapathy
ஜூன் 11, 2025 17:55

பாஜாக அரசு பல அசைக்கமுடியாத ஆதாரங்கள் இவனுக்கு எதிராக இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? மக்களை முட்டாளாக்கவா?


GMM
ஜூன் 11, 2025 17:41

தலித், எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர் விடுதி மேம்பட அரசின் நிதி சுழற்சி தேவை. வரி செலுத்துவோர் மிக குறைவு. பொது பணத்தில் கற்றவர் அடுத்த தலைமுறை கற்க பணியாளர் ஆன பிறகு பணத்தை திரும்ப தந்தால் அரசின் நிதி சுமை குறையும். வறுமை இருக்கும் போது குடும்ப கட்டுப்பாடு அவசியம். குடி போன்ற கேளிக்கை கூடாது. ராகுல் காங்கிரஸ் இதனை சட்டம் ஆக்க மன்றத்தில் வற்புறுத்த வேண்டும். ஒரு அறிவுரை கடிதம் நாடு முழுவதும் உள்ள சாதி, மத சமூக தலைவர்களுக்கும் ராகுல் அனுப்ப வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை