உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீடு பறிப்பு: ராகுல் புகார்

இட ஒதுக்கீடு பறிப்பு: ராகுல் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மத்திய அரசு பணிகளில் ' லேட்டரல் என்ட்ரி ' மூலம் ஆட்களை நியமித்து ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்படுகிறது'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: யுபிஎஸ்சி.,க்கு பதிலாக ஆர்எஸ்எஸ் மூலம் அரசு பணியில் ஊழியர்களை அமர்த்தி அரசியல் சாசனம் மீது பிரதமர் மோடி தாக்குதல் நடத்துகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியப் பணியிடங்களை 'லேட்டரல் என்ட்ரி' மூலம் ஆட்களை தேர்வு செய்வதன் மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.நாட்டின் உயர்மட்ட அதிகாரம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் பெறவில்லை. இதை சரி செய்வதற்கு பதில், ' லேட்டரல் என்ட்ரி' மூலம் அவர்கள், உயர் பதவியில் இருந்து மேலும் அகற்றப்படுகிறார்கள் என கூறி வருகிறேன். இது யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மீதான தாக்குதல். தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி மீதான தாக்குதல். சில கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் முக்கிய அரசு பதவிகளை ஆக்கிரமித்தால் என்ன ஆகும் என்பதற்கு சிறந்த உதாரணம் செபி. இதில் தான் தனியார் துறையை சேர்ந்த ஒருவர் முதல்முறையாக தலைவராக்கப்பட்டார். நிர்வாக கட்டமைப்பு மற்றும் சமூக நீதியை பாதிக்கும் எந்தவித தேச விரோத நடவடிக்கைகளையும் ' இண்டியா' கூட்டணி எதிர்க்கும். 'ஐஏஎஸ் பதவியை தனியார் மயமாக்குவது' என்பது இட ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான மோடியின் உத்தரவாதம். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

s chandrasekar
ஆக 19, 2024 07:13

இன்னும் எத்தனை நூறு வருடங்களுக்கு இட ஒதுக்கீடு தொடர வேண்டும். மருத்துவ தம்பதியர்கள் பிள்ளைகளுக்கும்மருத்து படிப்பில் இட ஒதுக்கீடு என்ன கொடுமையடா.


naranam
ஆக 19, 2024 04:52

முதலில் இட ஒதுக்கீடு என்பதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பாமரன் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை இட ஒதுக்கீடு கேட்கின்றனர் இந்த நாட்டில். வெட்கமாக இல்லையா இவர்களுக்கு. உரிய தகுதியிருந்தும் மற்ற பிரிவினர் வஞ்சிக்கப்படுகிறார்கள்


naranam
ஆக 19, 2024 02:14

இந்த இட ஒதுக்கீட்டயே மொத்தமாக நீக்கி விடப் போராட்டம் நடத்தவேண்டும்.


Suppan
ஆக 18, 2024 21:47

ராகுல் உங்கள் கொள்ளுத்தாத்தா , பாட்டி , அப்பா ஆட்சியிலேயே அரசு பதவிகள் வெளியிலிருந்து வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. உதாரணம்: அணு விஞ்ஞானி ஹோமி பாபா, விவசாய விஞ்ஞானி ஸ்வாமிநாதன், தொலைத்தொடர்பு வல்லுநர் சாம் பித்ரோடா இவர் உங்கள் கட்சியில்தான் உள்ளார். இதையெல்லாம் உங்களுக்கு எழுதிக்கொடுக்கவில்லையா?


sankaranarayanan
ஆக 18, 2024 20:46

இந்தியாவில் அரசியல்வாதிகள் அனைவரும் கையிலெடுப்பது இட ஒதுக்கிடு - ஜாதிவாரி கணக்கெடுப்பு இவைகளை வைத்தே இவர்கள் புழைப்பை நடத்தி வருகிறார்கள் ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்த முயற்சிகளை செய்யாதவர்கள் எதிர் கட்சிகளினால் பொதுவாகவே நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது திறமைக்கு அறிவிற்கு ஆற்றலிற்கு முன்னுரிமை கொடுங்கள் எல்லோரையும் இனி சமமாக பாவியுங்கள் பழைய கால கதைகளையே இன்னமும் சொல்லி சொல்லி அதையே பின் பற்றாதீர்கள் இடஒதுக்கிடு கொண்டுவந்த மாமேதை அம்பேத்காரரே இடஒதுக்கிடு சுதந்திரம் அடைந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறியதை யாருமே கண்டும் காணாததுமாக இறுக்கிறார்கள்


M Ramachandran
ஆக 18, 2024 20:06

மக்கள் மேல் உண்ம்மையானா அக்கறையிருந்தால் கோல்கட்டாவில் இறந்த பணியில் இருந்த மருத்துவ அம்மணி இறப்பிற்கு அலகு சென்று உன் மூஞ்சியாய் காட்டு பார்க்கலாம் நீயெல்லாம் ஒரு எதிர் கட்சி தலைவர் .


Ram
ஆக 18, 2024 19:27

இந்த கொசுவை அதுவும் வெளிநாட்டு கொசுவை அடிங்க


gmm
ஆக 18, 2024 18:58

இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது மக்கள் தொகை. மதம், சாதி வாரியாக விவரம். தற்போதைய மக்கள் தொகை விவரம். மத மாற்றம் விவரம். அதிகரிப்பு சதவீதம். சாதி எண். இன்றுவரை கல்வி, வேலையில் இட ஒதுக்கீடு பெற்ற சாதி, மத விவரம் காங்கிரஸ் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீடு பயன் / பாதிப்பு அறிய முடியும். குறைந்த பட்சம் வரி செலுத்தும். மக்களுக்கு மட்டும் MLA, MP தேர்வு செய்ய தகுதி. அதிக பட்சம் 6 முறை வாக்களிக்க உரிமை. அதன் பின் வளரும் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். வெளிநாட்டில் கட்டண, நன்கொடை அடிப்படையில் தயாரிக்க பட்ட ராகுல் அறிக்கை.?


Venugopal PV
ஆக 18, 2024 22:13

நாட்டை அடகு வைப்பார் ராகுல்கான்


gmm
ஆக 18, 2024 18:57

இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது மக்கள் தொகை. மதம், சாதி வாரியாக விவரம். தற்போதைய மக்கள் தொகை விவரம். மத மாற்றம் விவரம். அதிகரிப்பு சதவீதம். சாதி எண். இன்றுவரை கல்வி, வேலையில் இட ஒதுக்கீடு பெற்ற சாதி, மத விவரம் காங்கிரஸ் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீடு பயன் / பாதிப்பு அறிய முடியும். குறைந்த பட்சம் வரி செலுத்தும். மக்களுக்கு மட்டும் MLA, MP தேர்வு செய்ய தகுதி. அதிக பட்சம் 6 முறை வாக்களிக்க உரிமை. அதன் பின் வளரும் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். வெளிநாட்டில் கட்டண, நன்கொடை அடிப்படையில் தயாரிக்க பட்ட ராகுல் புகார் அறிக்கை.?


vadivelu
ஆக 18, 2024 18:48

பாவமையா மக்களை பிரிக்க எவ்வளவு முயற்சி எடுக்கிறார்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை