உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ம.ஜ.த.,வில் இருந்து சஸ்பெண்ட்

தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ம.ஜ.த.,வில் இருந்து சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியுள்ள எம்.பி.,யும் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா ம.ஜ.த.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.கர்நாடகா மாநிலம் இங்குள்ள ஹாசன் தொகுதி ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33; முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rrm66cxj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஜெர்மனி பயணம்

சில பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த 23ம் தேதி சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து விசாரிக்க மாநில காங்., அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்று விட்டார். , 'வீடியோவில் இருப்பது பிரஜ்வலின் முகம் இல்லை. 'டீப் பேக்' தொழில்நுட்பம் வாயிலாக போலி வீடியோ உருவாக்கி உள்ளனர்' என்று, ம.ஜ.த.,வினர் கூறியுள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழு அதிகாரி சீமா லட்கர், ஐந்து பெண்களை நேற்று விசாரணைக்கு அழைத்தார். அவர்களும் விசாரணைக்கு ஆஜராகினர். ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.ஆபாச வீடியோ பிரச்னையில் சிக்கியுள்ள பிரஜ்வலுக்கு, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. யாத்கிர், குருமிட்கல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், தேவகவுடாவுக்கு எழுதிய கடிதத்தில், 'சில நாட்களாக மாநிலம் முழுதும் பிரஜ்வல் ரேவண்ணா பெயரில் பரவி வரும் ஆபாச வீடியோவால் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் பிரஜ்வல் தவறு செய்து இருப்பார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

தர்ம சங்கடம்

கோலார், முல்பாகல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத்தின், 'எக்ஸ்' வலைதள பதிவு: பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரையும் விமர்சித்து சிலர் பேசுகின்றனர். இதனால் 19 எம்.எல்.ஏ.,க்களா அல்லது பிரஜ்வலா என்பதை, கட்சி தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை. ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் கொள்கையை காப்பாற்றுவதன் மூலம், எங்களை தர்மசங்கடத்தில் இருந்து காப்பாற்றுங்கள். இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

நிலைப்பாடு என்ன?

இது குறித்து, கட்சியின் மாநில தலைவரான குமாரசாமி அளித்த பேட்டியில், ''தவறு செய்தது யாராக இருந்தாலும், தண்டனை அனுபவிக்க வேண்டும். பிரஜ்வலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று, சில தலைவர்கள் கூறுகின்றனர். ஹூப்பள்ளியில் இன்று எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கிறது. பிரஜ்வலை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவு எடுப்போம். ஒருவர் செய்த தவறுக்காக, கட்சியை குறை சொல்வது சரி இல்லை. இந்த விஷயத்தை காங்கிரசார் பெரிதுபடுத்த பார்க்கின்றனர்,'' என்றார்.இதன்படி ம.ஜ.த.,வின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை சஸ்பெண்ட் செய்வது என முடிவு செய்யப்பட்டது. மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினரின் அறிக்கை தாக்கல் செய்யும் வரை சஸ்பெண்ட் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Jai
மே 01, 2024 08:32

குடும்ப ஆட்சியில் இருந்த வாரிசுகள் நாட்டின் ராஜா என்று நினைப்பதும் தாங்கள் அதிகார பலம் மற்றும் பணபலத்தின் மூலம் எது செய்தாலும் தவறில்லை என்று நினைப்பதும் சகஜம் தானே. சொற்ப ரூபைகளுக்கு உன்னை நீ விற்றால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.


Ramesh Sargam
ஏப் 30, 2024 21:06

முகத்தை பார்த்தாலே தெரிகிறது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான தண்டனை கிடைக்கப்பெறவேண்டும் ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு இவர் சித்தப்பா, முந்தைய கர்நாடக முதல்வர் குமாரசாமி இவர் விஷத்தில் இருந்து நழுவி விட்டார்.


தாமரை மலர்கிறது
ஏப் 30, 2024 19:11

மார்பிங் செய்யப்பட்ட போலிவிடியோவாக இருக்கலாம் வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் அரசியல் காரணத்திற்காக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது சிபிஐ விசாரித்து ரிலீஸ் செய்தவரை பிடித்து ஜெயிலில் போடவேண்டும்


ES
ஏப் 30, 2024 22:46

You should be ashamed of yourself writing utter bullshit defending this piece of shit guy


abdulrahim
ஏப் 30, 2024 18:22

பெண்களின் சக்தி பற்றி மேடைகளில் நடிப்பபவர் இதுவரை பெண்கள் பாதிக்கப்பட்ட பல பிரச்சினைகளில் வாயே திறப்பதில்லை , மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பியால் வன்கொடுமை செய்யப்பட்டபோதும் ,மணிப்பூரில் பெண்களை வீதியில் ஆடைகளை களைந்து இழுத்து சென்றபோதும், தற்போது பிரஜ்வல் விவகாரத்தில் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும்சரி அந்த மகா நடிகர் வாயே திறக்கமாட்டார்


ஆரூர் ரங்
ஏப் 30, 2024 21:51

உங்க ஆதர்ச பிரதமர் வேட்பாளர் மேலேயே போஸ்கோ வழக்கு நிலுவையில் உள்ளதாக அவரது தேர்தல் மனுவிலே இருக்கிறதே.


Indhuindian
ஏப் 30, 2024 16:09

எப்படியெல்லாம் தப்பிச்சுடறாங்க


பாமரன்
ஏப் 30, 2024 15:56

எதிரி கட்சிகளை சொல்ற மாதிரி ஜெர்மனிக்கு தப்பித்து ஓட்டம் அப்பிடின்னு போட்டிருப்போம்


kulandai kannan
ஏப் 30, 2024 15:51

வாரிசு அரசியல் கட்சிகளை ஒழித்துக் கட்டுவோம்.


ஆரூர் ரங்
ஏப் 30, 2024 15:05

ஆறு வருடங்களுக்கு முற்பட்ட வீடியோவை காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தேர்தல் நேரம் பார்த்து வெளியிட வைத்துள்ளாராம். இது மஜத காங்கிரஸ் கூட்டணியாக ஆண்ட போது தயாரிக்கப்பட்டது. ஆக இந்த வீரதீர செய்கை காங்கிரசு ஒக்கலிகா வாக்குகளை இழக்க மட்டுமே உதவும் .


abdulrahim
ஏப் 30, 2024 18:12

ஒரு முழம் கயிறு கிடைக்கலையா


Vathsan
ஏப் 30, 2024 14:24

பிரிஜேஷ், ரேவண்ண, எத்தனை பேரு?


Rpalnivelu
ஏப் 30, 2024 13:38

விஞ்ஞானமா செய்யத் தெரிலீயா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை