உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு

3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு

புதுடில்லி: ‛‛ மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி '' என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். பார்லிமென்ட் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lt6u1r3i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.* 60 ஆண்டுக்கு பின் ஆட்சியில் இருக்கும் அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.* அரசின் மீது மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.*லோக்சபா தேர்தல் என்பது உலகளவில் நடக்கும் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆகும்.* இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது* இந்தியா உலக பொருளாதாரத்தில் 3 வது இடத்தை பிடிக்க வேகமாக முன்னேறி வருகிறது.* 40 ஆண்டுகளில் வன்முறை, போராட்டம் இல்லாத வகையில் அமைதியாக தேர்தல் நடந்துள்ளது.*இம்முறையும் பெண்கள் அதிகளவு ஓட்டளித்து வரலாறு படைத்துள்ளனர்.*இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.அதில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும்*மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் அரசு செயலாற்றுகிறது.*சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறுகிறது.இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அமராவதி
ஜூன் 27, 2024 15:51

எழுதிக்.குடுத்ததை படிச்சு ஜனநாயக கடமை ஆற்றப்பட்டது.


V Venkatachalam, Chennai-87
ஜூன் 27, 2024 16:36

அடேங்கப்பா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு? தமிழ்நாடு ( மிக்ஸர் சாப்பிட போயிருக்கும்) எம். பி ங்க எல்லாம் உறுதி மொழி எடுக்கும் போது உளறினான்களே.. அது எழுதி கொடுத்ததா.. இல்லையா? ன்னு சொல்லேன்..


Vathsan
ஜூன் 27, 2024 14:40

ஜெயா அம்மா சொன்னது போல இது ஒரு மைனாரிட்டி அரசாங்கம். ஒரே நல்ல விஷயம் இந்த முறை என்னவென்றால் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவாகியுள்ளது. பிஜேபிக்கு வேண்டிய சட்டங்களை மட்டும் இப்போது தான்தோன்றித்தனமாக இயற்ற முடியாது. வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. மக்களும் ஒரே கட்சியை பிடித்து தொங்கிக்கொண்டு இல்லாமல், அடிக்கடி மாற்றினால் பாஜக போன்ற ஆளுங்கட்சி செய்யும் ஊழல்களும் வெளியில் வரும் அடுத்த ஆட்சியில். இல்லையென்றால் ஊழல்கள் மண்ணோடு மண்ணாக மழுங்கடிக்கப்பட்டு விடும்.


V Venkatachalam, Chennai-87
ஜூன் 27, 2024 16:43

இப்போ வலுவான எதிர் கட்சி? தேசபக்தி உள்ளவர்கள் எதிர்கட்சியாக இருக்கிறார்களா? என்னே அறிவு?


Maheesh
ஜூன் 27, 2024 13:52

அடைத்த வைக்கப்பட்ட கூண்டு பறவைகளால் கூட சிந்திக்க முடியும். ஒரு முறை கட்சிக்குள் சென்று வந்தாலோ அல்லது அரசு ஊழியர் ஆனாலோ அவ்வளவுதான், ஐக்கியம்தான்.


Narayanan Muthu
ஜூன் 27, 2024 13:35

ஒட்டுப்போட்ட சட்டையாக இருந்தாலும் சட்டைதான் என்பதாக பெரும்பான்மை அரசு என புரிந்து கொள்ளவும்.


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 27, 2024 12:45

நீ சிட்னி தாண்டி வந்து விடாதே


Velan Iyengaar
ஜூன் 27, 2024 12:02

மக்களாட்சியில் செங்கோலாம் .....ஒரே நாடகபாணியா இல்ல இருக்கு


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 12:32

முடியாட்சிக்கும் ஒரே குடும்ப பரம்பரை ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? கட்சிக்கு ஓனர்


மேலும் செய்திகள்