உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாலையே பிரசாதம் கேட்கும் பக்தர்கள்: ஆன்லைன் சேவை ரத்து செய்யப்படுமா?

அதிகாலையே பிரசாதம் கேட்கும் பக்தர்கள்: ஆன்லைன் சேவை ரத்து செய்யப்படுமா?

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட 34,000 கோவில்கள் உள்ளன. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் தரும் 205 கோவில்கள், 'ஏ' பிரிவு என்றும், 5 முதல் 25 லட்சம் ரூபாய் வருவாய் தரும் 193 கோவில்கள், 'பி' பிரிவு என்றும், 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் தரும் கோவில்கள், 'சி' பிரிவு என்றும் பிரிக்கப்பட்டு உள்ளன.

சிக்கல்

'ஏ, பி' பிரிவு கோவில்களில் ஆன்லைன் வாயிலாக பூஜைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. பக்தர்கள், ஆன்லைனில் அர்ச்சனை உட்பட பல சேவைகளுக்கு முன்பதிவு செய்கின்றனர். இவர்கள் மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பூஜைகளில் பங்கேற்ற பின், பதிவு செய்த எண்களை காண்பித்து, பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம்.ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாக கோவில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, அறநிலைய துறை கமிஷனருக்கு, அனைத்து கர்நாடக ஹிந்து கோவில்கள் அர்ச்சகர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.கூட்டமைப்பு பொதுச் செயலர் தீக் ஷித் கூறியதாவது: அறநிலைய துறை கோவில்களில் மொபைல் செயலி சேவை, சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இரவில், மொபைல் செயலி வாயிலாக பூஜைக்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள், மறுநாள் காலையே வந்து, 1 கிலோ புளியோதரை, 1 கிலோ பொங்கல் பிரசாதம் தருமாறு கேட்கின்றனர்.

பூஜை கட்டணம்

பிரசாதம் தயார் செய்ய ஊழியர்களும், போதிய நேரமும் தேவை. அதிகாலையே தயார் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் அபிஷேகத்துக்கான பால், தயிர் உட்பட பொருட்களைப் பதப்படுத்த எங்களிடம் கிடங்குகள் இல்லை. மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில், தட்சிண கன்னடாவின் குக்கே சுப்பிரமணியா கோவில்களில் மட்டுமே உணவு பதப்படுத்தும் கிடங்குகள் உள்ளன.மேலும், ஆன்லைனில் பதிவு செய்யப்படும் பூஜை கட்டணங்கள், தனியார் ஏஜென்சிகளுக்கு சென்று, இரண்டு வாரங்களுக்கு பின்னரே, கோவிலுக்கு வருகிறது. பிரசாதம் தயாரிக்க, போதுமான பணம் தேவை. இது சேவையாக இல்லாமல் தொழிலாக மாறிவிட்டது. இது, கோவிலின் புனிதத் தன்மையை குறைத்து விடும். எனவே, கோவில்களில் ஆன்லைன் சேவை பதிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2024 12:27

முதலில் பாரத தேசம் முழுவதும் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் அரசு கொள்ளை அடிப்பதை நிறுத்த இந்து அறநிலையத் துறை இந்து அறநிலையத்துறை சட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு செய்வது வெளி ஏஜென்சிக்கு ஏன் செல்ல வேண்டும். நேரடியாக கோயில் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கலாமே. அந்த ஏஜென்சிகள் இந்து மதத்தவர்களால் நடத்தப்படும் ஏஜென்சிகளா அல்லது வேற்று மதத்தினர் நடத்தும் ஏஜென்சிகளா அந்த ஏஜென்சிகள் எவ்வளவு கமிஷன் அள்ளுகிறார் கள் என்பதை பக்தர்களுக்கு இந்த பாழாய் போன அரசுகள் பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


கனோஜ் ஆங்ரே
ஆக 01, 2024 18:30

ஏன் சார்... இந்து அறநிலையத்துறை...ன்னு ஒண்ணு இல்லென்னா... உங்கள மாதிரி ஆளுங்க அப்படியே மொத்தமா ஆட்டய போட்டுட்டு போலாம்...னு பார்க்குறீங்களா....? அந்த காலம் மலையேறி ரொம்ப நாளாச்சு சாமி... “கோவில் கூடாது என்பதல்ல... கோவில் கொடியவர்கள் சிலர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது சாமியோவ்....


Swaminathan L
ஜூலை 31, 2024 13:33

கட்டணச் சேவைகள் வந்த பிறகு தொழிலாகத் தான் மாறி விட்டது. விடியற்காலை தரிசனம் அல்லது வேறொரு கட்டண சேவை என்றால் அது முடிந்து வெளிப் போகும் பக்தர்கள் பிரசாதம் அதுவும் விலைக்குக் தான் கேட்கத் தான் செய்வார்கள். பிரசாதம் விலைக்கு வாங்க பல மணி நேரம் காத்திருக்க விரும்புவார்களா என்ன?


Ramesh Sargam
ஜூலை 31, 2024 12:22

இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொண்டவை. நாமே இதற்கு ஒரு முடிவுகாணவேண்டும். இதற்காக முறையில்லாமல் இறைவனை நிந்திப்பது சரியில்ல. யாரும் நிந்திக்க வில்லை. அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று முன்னமே எச்சரிக்கிறேன்.


ram
ஜூலை 31, 2024 10:40

இங்கு இருக்கும் அல்லொலியா அமைச்சர் போல அங்கும் ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் கூடிய விரைவில் தங்கத்தை உருக்கொவோம் என்று சொல்லுவார்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்து கோவில்களை ஆழித்து விடுவார்கள்.


Natarajan Ramanathan
ஜூலை 31, 2024 09:59

குறைந்தது ஒரு வாரம் முன்பே பணம் கட்டினால் மட்டுமே பூஜை செய்து பிரசாதம் கொடுக்க வேண்டும்.


veeramani
ஜூலை 31, 2024 09:21

சாமி யை கும்பிட பணம் கேட்பது நல்லதல்ல. அபிஷேகம் பணம் படைத்தவரின் செயல். இதற்கு அதிகாலை எப்படி பிரசாதம் கொடுக்கமுடியும்.. கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பணம் தேவை .


VENKATASUBRAMANIAN
ஜூலை 31, 2024 08:40

இதுநாள்வரை ஒழுங்காக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி கங்கு வந்ததும் சம்பாதிக்க ஆரம்பத்து விட்டார்கள். இது திராவிட மாடலின் தாக்கம்


Nandakumar Naidu.
ஜூலை 31, 2024 08:18

கோயில்களை அரசன் கட்டுப்பாட்டில் இருந்து அகற்ற வேண்டும். அரசை கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். மத்திய அரசே இதற்கு ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மத சார்பற்ற அரசு என்றால் இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசியல் கட்டுப்பாட்டில் உள்ளது?


mahalingamssva
ஜூலை 31, 2024 07:59

.....இது சேவையாக இல்லாமல் தொழிலாக மாறிவிட்டது


அப்பாவி
ஜூலை 31, 2024 07:02

கோவிலெல்லாம் தொழிலாக மாறி ரொம்ப நாளாச்சு. ஆன்லைனில் பதிவு செய்பவர்களும் பக்தர்கள் அல்ல, வியாபாரிகள். ஏதாவது ஆதாயம்.இல்லாம இதெல்லாம் செய்ய மாட்டார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை