உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாதேஸ்வரா கோவிலில் குவிந்த பக்தர்கள்

மஹாதேஸ்வரா கோவிலில் குவிந்த பக்தர்கள்

சாம்ராஜ் நகர்: ஆங்கில புத்தாண்டின் முதல் நாளில், சாம்ராஜ்நகர் மலை மஹாதேஸ்வரா சுவாமியை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.ஆண்டின் முதல் நாளான நேற்று, புகழ் பெற்ற ஆன்மிக தலங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. அதுபோன்று, சாம்ராஜ்நகர் மாவட்டம் மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி தமிழகம் உட்பட அண்டை மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்தனர்.மாவட்டத்தில் உள்ள மற்றொரு யாத்திரை தலமான பிலிகிரி ரங்கனபெட்டாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டின் முதல் நாளில் ரங்கநாத சுவாமியை தரிசனம் செய்ய, மக்கள் குடும்பத்துடன் மலைக்கு வந்தனர்.ஹிமாவத் கோபாலசுவாமி மலை, ஹுலுகானா முரடி வெங்கடரமண சுவாமி கோவில் உட்பட பல கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை