ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் அபேஸ்
பெங்களூரு: பிரபலமான நகைக்கடையில், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் திருடப்பட்டு உள்ளது.பெங்களூரின், எம்.ஜி., சாலை பரபரப்பான, மிகவும் முக்கியமான வர்த்தக பகுதிகளில் ஒன்று. இங்கு நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், ஷாப்பிங் மால் என, பல்வேறு அங்காடிகள், ஹோட்டல்கள் உள்ளன.இதே சாலையில், பிரபலமான ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. நேற்று முன் தினம், வாடிக்கையாளரை போன்று வந்த நபர் ஒருவர், வைர மோதிரங்களை காண்பிக்கும்படி கேட்டார். கடை ஊழியர்களும் காண்பித்தனர்.அப்போது ஊழியர்களின் கவனத்தைத் திசை திருப்பிய நபர், தான் கொண்டு வந்திருந்த போலி மோதிரத்தை, நகை பெட்டியில் வைத்துவிட்டு வைர மோதிரத்தை திருடிக்கொண்டு தப்பிவிட்டார். சிறிது நேரத்துக்கு பின், மோதிரத்தை பார்த்தபோது, ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பரிசோதித்தபோது, அது போலியானது என்பது தெரிந்தது.வைர மோதிரம் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. உடனடியாக கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில், நகைக்கடை ஊழியர்கள் புகார் அளித்தனர். போலீசாரும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, திருடனை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.இவர் இதே போன்று, பல நகைக்கடைகளில் திருடி இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.