உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் கைது மோசடி; சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.11.8 கோடி பறிப்பு

டிஜிட்டல் கைது மோசடி; சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.11.8 கோடி பறிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: பெங்களூருவில் நடந்த டிஜிட்டல் கைது மோசடியில், 39 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ரூ.11.8 கோடியை இழந்தார். அவரிடம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை நடந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நவம்பர் 11 அன்று முதல் அழைப்பு வந்தது. 'ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்கள் சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் துன்புறுத்தல் செய்திகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக' சாப்ட்வேர் இன்ஜினியரிடம், அந்த போன் அழைப்பில் கூறியுள்ளனர்.மும்பையின் கொலாபா சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உங்களை டிஜிட்டல் கைது செய்வதாகவும் கூறியுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், நேரில் வந்து கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று போனில் அழைத்தவர் அச்சுறுத்தினார். மேலும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கும்படியும் எச்சரித்துள்ளார். 'ஸ்கைப்' செயலி பதிவிறக்கம் செய்யச் சொல்லி பேசினர். வீடியோ அழைப்பில் பேசிய அந்த நபர், போலீஸ் சீருடையில் இருந்துள்ளார். அவர், சாப்ட்வேர் இன்ஜினியரிடம், 'உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது' என்று கூறியுள்ளார். போலீஸ் சீருடையில் இருந்த இன்னொருவர், 'வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேட்கத்தவறினால் உங்கள் மொத்த குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம்' என மிரட்டினார்.இதனால் சாப்ட்வேர் இன்ஜினியர் பதறிப்போனார். அவர் கூறியபடி எல்லாம் செய்துள்ளார். கைது அச்சத்தில், அவர்கள் கூறியபடி, பல பரிவர்த்தனைகளில் ரூ.11.8 கோடியை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பிய பிறகும், மீண்டும் கேட்பதை அந்த நபர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் தான் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்ட அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸ் விசாரணையில், அவர் மோசடி கும்பலிடம் பணத்தை பறிகொடுத்தது உறுதி செய்யப்பட்டது.மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்ததற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி.என்.எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெங்களூரு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mohan
ஜன 20, 2025 10:49

சாப்ட்வேர் இஞ்சினீயர் எப்படி ஏமாறுவார்??.வருமான வரிக்காரர்கள் அடிச்சு பிடுங்கும் 35% வரியிலிருந்து தங்கள் பணத்தை காப்பாற்ற பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதை முதலீட்டுபுரோக்கிங் நிறுவனங்கள் இவிங்க கம்ப்யூட்டர் சிஸ்டமில் இருந்து தரவுகளை திருடுவது அப்படி ஒன்னும் பெரிய கஷ்டமில்ல சைபர் கிரைம் திருடர்களுக்கு எந்த விதத்தில் தடுக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. டிஜிடல் இந்தியா என்று பெருமை பேசும் மத்திய அரசும், அதன்மூலம் தங்களது வளர்ச்சியை பெருக்கிக் கொள்ளும் போன் கம்பெனிகளும், வங்கிகளும், ஏன் எந்த வித பொறுப்பும் எடுத்துக்கொள்வதில்லை? போன் கம்பெனிகள் காலர் ஐ.டியுடன் மட்டுமே உள்ள அழைப்புகளை தந்தால் பிரச்னை முக்கால்வாசி குறையுமே அவர்களை ஏன் சுதந்திரமாக விடுகிறது மத்திய அரசு?? மேலும் வங்கிகள் தனி நபர்களின் பணத்தை ஏன் அவ்வளவு சுலபமாக ரிலீஸ் செய்ய வேண்டும்?? வாடிக்கையாளர் பணத்தை முன்னரே பதிவு செய்யாத தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ரிலீஸ் செய்ய மறுக்கலாமே குறிப்பிட்ட தடவை, குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை ரிலீஸ் செய்ய வாடிக்கையாளர் வங்கிக்கு வந்தாக வேண்டும் என்பது போல கட்டுப்பாடுகளை ஏன் விதிக்கக்கூடாது ?? இவற்றிற்கு சேவை கட்டணம் விதிக்கலாம் தனிநபரின் பணத்தை ஏன் சுலபமாக வினாடிகளில் தரவேண்டும்??? நிறுவனங்களின் பணம் அப்படி தரப்பட இயலாதபடி நிறைய தடைகள் உள்ளனவே?? தனிநபரை இந்த அரசு காக்கக்கூடாதா?? """ டிஜிடல் இந்தியா""" என்கிற கணிணி வசதி ....""".மிகச் சுலப திருடல் இந்தியா""" என்ற வசதியாக மாறாமலிருக்க உடனே போன் கம்பெனிகளையும் பங்கு புரோக்கிங்,வங்கி,கடன் நிறுவனங்களையும் நெருக்கி கசக்கினால்... இந்த """ சைபர் திருட்டு""" குற்றங்கள் ஒழியும். மத்திய அரசுக்கு நேர்மையும் தெம்பும் உள்ளதா???


அப்பாவி
டிச 24, 2024 09:22

இவன் கிட்டே 11 கோடி எப்புடி வந்தது? அதை விசாரியுங்க. ஏதாவது ஃப்ராடு பண்ணித்தான் சம்பாரிச்சிருப்பான்.


Bala
டிச 23, 2024 22:36

முட்டாள்ளும் அவர் பணமும் தங்குவதில்லை


Pradeep
டிச 23, 2024 21:40

நம்பும் படி இல்லை. சாதாரண மக்களுக்கு தெரியும் மெத்த படித்த என்ஜினீயர் சாருக்கு தெரியாத… எந்த காலேஜ் பா அவரு?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 24, 2024 11:53

கோரோணாவில் பாஸ் செய்த என்ஜினீயர்....


Oru Indiyan
டிச 23, 2024 20:56

2024 ஆம் ஆண்டில் இப்படி சைபர் குற்றத்தில் 11 கோடி ரூபாய் இழந்திருப்பவர் நிச்சயமாக ஒரு அறிவில்லாத மனிதர் தான். இவர் மென்பொருள் எழுதி என்ன வெங்காயம் கிழித்தார்.


Pradeep
டிச 23, 2024 21:41

ஆமாம்


Sivakumar Subbian
டிச 23, 2024 20:51

இதில் ரூபாய் 11 கோடி எப்படி ஒரு வேளை செய்து வரும் நபர் ஒருவர் ஏற்பாடு செய்ய முடியும்? இப்படியான நிலைமையில் ஏன் அவ்வாறு பயப்பட வேண்டாமே. மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்.


Barakat Ali
டிச 23, 2024 20:31

இவ்ளோ சுளுவா ஏமாந்துட்டாரா, அதுவும் படிச்ச இஞ்சினியரு .... அட போங்கப்பா .....


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 20:25

அண்ட் நபரைப் படித்தவர் என்றே சொல்ல முடியாது. இத்தனை க்கும் software வேற படிச்சிருக்காராம். முதல் அழைப்பு வந்ததுமே True caller ல் அந்த எண் யாருடையது, எங்கிருந்து என்று தெரியும். அது இன்டர்நெட் அழைப்பாக இருந்தால், நிச்சயம் அது அரசின் எந்தத் துறையும் அல்ல என்று ஸ்கூல் பையனுக்கு கூடத் தெரியும். அது எப்படி 11.8 கோடி ரூபாய் ஒரே நாளில், இவர்களுக்கெல்லாம் புரட்ட முடிகிறது???


Karthik
டிச 23, 2024 20:20

சாப்ட்வேர் என்பது எனக்கு தெரிந்தவரை fully digital coding தான் . ஒரு வேலை இவர் காசுகொடுத்து பாஸ் ஆனவரா இருக்குமோ ?? அதான் போல, கேட்டப்பெல்லாம் அள்ளி கொடுத்திருக்கார் ..


புதிய வீடியோ