உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "எகிறுகிறார்" திக்விஜய்

"எகிறுகிறார்" திக்விஜய்

லோக்பால் மசோதா, சமீபத்தில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து மசோதா நகலை, ஹசாரே எரித்தார். பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட நகலை எரிப்பது, அரசியலமைப்புக்கு உகந்த செயலா? அவர் ஊழலுக்கு எதிராக போராடுவதாகத் தெரியவில்லை. அரசியல் தான் நடத்துகிறார். ஹசாரே உள்ளிட்ட மக்கள் நல ஆர்வலர்கள் உண்ணாவிரதம் இருப்பதை கைவிட்டு, பார்லிமென்ட் நிலைக் குழுவிடம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த சமூக சேவை அமைப்புகள், தாங்கள் விரும்பும் வகையில் மசோதாவை நிறைவேற்றும் படி, எம்.பி.,க்களை வற்புறுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சட்டம் - ஒழுங்கு எல்லை மீறி போய்விடக்கூடாது என்பதற்காக, அரசு நிர்வாகம் சில தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும். அந்த வகையில், ஹசாரே கைது செய்யப்பட்டது நியாயமானது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ