உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதியாக தினேஷ் குமார் நியமனம்

தலைமை நீதிபதியாக தினேஷ் குமார் நியமனம்

பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தினேஷ் குமாரை, மத்திய அரசு நியமித்துள்ளது. இவர், பிப்., 24ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் பிரசன்ன வரலே. இவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து, உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டது.இதையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக, ஜன., 24ம் தேதி தினேஷ் குமார் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவரையே நியமித்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று மத்திய அரசு அவரை நியமித்து உள்ளது.இவர், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியக 2015 முதல் பணியாற்றி வருகிறார். இவர், பிப்., 24ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் மிக குறுகிய காலம், தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ