உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கப்பற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி நியமனம்

கப்பற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கப்பற்படை புதிய தளபதியாக தினேஷ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கப்பற்படை தளபதியாக உள்ள அட்மிரல் ஹரிகுமார் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கப்பற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் வரும் 30-ம் தேதி ஒய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய கப்பற்படை தளபதியாக துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தினேஷ் திரிபாதி, 1985ம் ஆண்டு ஜூலை 1ல் கடற்படையில் பணியமர்த்தப்பட்டார். ஜூன் 2019 இல் வைஸ் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஏப் 19, 2024 08:03

இந்திய பெருங்கடலின் ஆதிக்க சக்தியான இந்திய கப்பற்படையின் தலைமை பொறுப்பு ஏற்கயிருக்கும் திரு திருப்பதி அவர்களுக்கு சல்யூட் உங்களின் பின்னால் இந்தியர்கள் அனைவரும் உள்ளோம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ