உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்; தலைமை அர்ச்சகர் வேதனை

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்; தலைமை அர்ச்சகர் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் திருப்பதி லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதாக அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறினார்.உலகளவில் பிரசத்தி பெற்ற திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில், கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்படுகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதனை ஜெகன்மோகன் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இது குறித்து மத்திய அரசு அறிக்கை கோரி உள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என் கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது: கடந்த ஜன.,22ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் திருப்பதி லட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. எத்தனை லட்டு வந்தது என்பது குறித்து அறக்கட்டளைக்கு தான் தெரியும். எனக்கு தெரியாது. ஆனால், வந்தவை அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது வெளியாகி உள்ள தகவல் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒரு லட்சம் லட்டு பிரசாதங்களை அயோத்திக்கு திருப்பதி தேவஸ்தானம் அளித்து இருந்தது. அறக்கட்டளை பொதுச்செயலாளர் கோபால் ராய் கூறியதாவது: திருப்பதி லட்டு விவகாரத்தில் மத்திய அரசின் விசாரணையை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். கும்பாபிஷேகம் அன்று ஏலக்காய் விதைகளை தான் பக்தர்களுக்கு விநியோகித்தோம். நான் திருப்பதிக்கு 1981 ல் ஒரு முறை மட்டுமே சென்றுள்ளேன். இந்த சர்ச்சை குறித்து தற்போது கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

ஹனுமன் கோவிலில்

அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கார்கி கோயில் நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் 'பிராண்டட்' நிறுவனங்களின் நெய்யை மட்டும் தான் பயன்படுத்துகிறோம். கோயில் நிலத்தில் வாடகைக்கு உள்ள கடைக்காரர்களும் அந்த நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரிக்கின்றனர். அவ்வபோது, நெய்யின் தரம் குறித்த பரிசோதனை செய்யப்படும். அதில் ஏதாவது பிரச்னை உள்ளது என பக்தர்கள் புகார் தெரிவித்தால், அந்த கடை மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Velan Iyengaar
செப் 22, 2024 08:20

ஜெகன்மோகன் ரெட்டி புண்ணியத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எல்லாம் பாவத்தின் சம்பளமாக தான் பெருமாள் பார்ப்பார் .... அப்போ அந்த பாவத்தில் உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சிக்கும் பங்கு தவறாமல் போய்விடும் ....


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 21, 2024 23:26

4 மாநில தேர்தல் நேரத்தில் நாயடு இப்படி செய்து பிஜேபி க்கு ஆப்பு வைத்து விட்டார் ஏன் மோடி ஆட்சி கூட இந்த தெய்வ குற்றதால் கவிழ வாய்ப்பு இருக்கு


Ramesh Sargam
செப் 21, 2024 20:02

இந்த திருப்பதி லட்டு கலப்படத்திற்குப்பிறகு எந்த கோவிலில் பிரசாதம் கொடுத்தாலும் வாங்க கொஞ்ச யோசிக்கவேண்டி இருக்கிறது. இதேபோன்று கலப்படம் மற்ற மத இடங்களில் நடந்திருந்தால், நாடு இந்நேரம் ரணகளமாகி இருக்கும். ஹிந்துக்கள் எப்பவும் பொறுமையை கடைபிடிப்பவர்கள்.


Sudha
செப் 21, 2024 19:24

யார கேக்கற வேளா, ராஹுலையா


Narayanan Muthu
செப் 21, 2024 18:35

பன்றி மாடு ஆகியவையின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படும் ட்யூப் மாத்திரை சாப்பிடாத ஆளே உலகில் இல்லை. திருப்பதி லட்டு எல்லாம் பெரிய மேட்டரா விடுங்கப்பா


Corporate Goons
செப் 21, 2024 17:43

நாயுடுவின் ஆக்கிரமிப்பு வீடு ஆற்றில் மூழ்கிவிட்டது அல்லது தண்ணீரில் மிதந்தது . இதிலிருந்து தப்பிக்க மோடியும் நாயுடுவும் கண்ணாமூச்சி காட்டுகிறார்கள்.


Corporate Goons
செப் 21, 2024 17:41

நாட்டையே அந்நியர்களுக்கு, ஒரு சிலருக்கு விற்றுவிட்ட கும்பல், மக்களின் முன் நிற்க முடியாமல், இப்படி பல புரளியை கிளப்பிவிட்டு மீன் பிடிக்க நினைக்கிறது.


அப்பாவி
செப் 21, 2024 17:34

டிமாண்ட் அதிகமான அதிகப்படி பசு நெய்க்கு எங்கே போவாங்க? திருப்பதி கோவிலில் தரப்படும் லட்டு வினியோகத்தைத் தவிர மற்ற லட்டுகள் தயாரிப்பு , விற்பனை நிறுத்தப்பட வேண்டும். அங்கே என்னடான்னா சிமிண்ட் ஃபேக்டரி மாதிரி ஒரு லட்டு ஃபேக்டரி. காணாததைக் கண்ட மாதிரி அவனவன் 25, 50 லட்டுன்னு வாங்கினா மாட்டுக்.கொழுப்பு என்ன மனுசன் கொழுப்பையே கலந்து பண்ணிக்குடுப்பான். பக்தி போய் யாவாரம் பூந்திடுச்சு கோவிந்தோய்.


Velan Iyengaar
செப் 21, 2024 16:32

ஜெகன் ரெட்டி சென்ற ஆட்சியில் மசோதாக்களுக்கு எல்லாம் ஆதரவு தந்துகொண்டிருந்தபோது இப்படி ஒரு விஷயம் நடப்பது இவர்களுக்கு தெரியாமல் போனதா ?? அப்போது மட்டும் இனித்ததா ???


ஆரூர் ரங்
செப் 21, 2024 17:31

எம்ஜியார் பிரச்சாரத்தால் கிடைத்த ஓட்டுக்கள் மட்டும் திமுக வுக்கு இனித்தது. பிறகு பரம எதிரி ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை