உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கூட்டம் பிளாப் - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?

காங்கிரஸ் கூட்டம் பிளாப் - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?

பாட்னா: பீகாரில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பங்கேற்ற கூட்டத்திற்கு ஆள் வராததால் மாவட்ட தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இம்மாநிலத்தை பொறுத்தவரை பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் முதல்வராக உள்ளார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து மக்கள் தொடர்பு பிரசாரங்களை நடத்தி வருகின்றனர்.

35 ஆண்டு காலம் காங்., வனவாசம்

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியினர் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் அரசியல் பணியை துவக்கி உள்ளனர். இதிலும் சுமுகமான நிலை இல்லை. கடந்த 35 ஆண்டு காலமாக பீகாரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் பரபரப்பாகும்.

' லெப்ட், ரைட் '

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பீகாரில் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பங்கேற்றார். ஆனால் பெருவாரியான கூட்டம் வரவில்லை. அனைத்து சேர்களும் காலியாக கிடந்தன. இதனால் கார்கே கடுப்பானார். பக்ஸார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பாண்டேவை அழைத்து ' லெப்ட், ரைட் ' வாங்கினார். தொடர்ந்து மாவட்ட தலைவர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இதனால் காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு உயர்மட்டத் தலைமையிடம்தான் அதிகம் உள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில் ராகுல், கார்கே போன்ற தலைவர்கள் முன்வந்து அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். பீகாரில் காங்கிரஸின் பரிதாபகரமான நிலைக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது. உயர் தலைமைக்கு, குறிப்பாக ராகுலுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? மூன்றாவது கேள்வி, மனோஜ் பாண்டே போன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் காங்கிரஸின் நிலைமை மேம்படுமா?

எதுவும் இல்லை ! அனுராக் தாக்கூர் தாக்கு

பீகாரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ., எம்பியுமான அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறுகையில், ' பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு என சொல்லும் படியாக எந்த தலைவரும் இல்லை. கொள்கையும் இல்லை. அவர்களுக்கு நோக்கங்களும் தொலைநோக்கும் இல்லை. காங்கிரஸ் இங்கு ஒரு அரசை ஆதரித்த போதெல்லாம், காட்டு தர்பார் ஆட்சி நடந்தது. பீகாரில் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை. ' இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Karthik
ஏப் 22, 2025 15:00

பொதுகூட்ட பந்தலில் சுமார் 20 30 தலைகள் தெரிகின்றதே? அது யாராக இருக்கும்? நான் நினைக்கிறேன்.. லைட் போட்டவர், மைக் செட் போட்டவர், ஷாமியானா பந்தல் போட்டவர் , மேடை அமைத்தவர், தரை விரிப்பு போட்டவர், போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள், போன்ற கான்ட்ராக்டர்களும், வெயில் நேரத்தில் நிழலுக்காக பந்தலின் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களும் தான் என்று படத்தை பார்த்தாலே தெரிகிறது.


Rajan A
ஏப் 22, 2025 13:43

ஒரு குடும்பத்தில் கொத்தடிமை


வாய்மையே வெல்லும்
ஏப் 22, 2025 13:37

காங்கிரஸ் கட்சியின் அடுத்த கூட்டம் அமெரிக்காவில் வையுங்க. அமெரிக்காவில் தான் பீகார் எலெக்ஷன் நடக்கவுள்ளதாக ராவுல் கான் இப்போது அங்கு சென்று கூறியுள்ளார். ஹா ஹா ஹா.. நீங்களும் உங்க கட்சு பவுசும். புல்லரிக்குது..


sankaranarayanan
ஏப் 22, 2025 13:09

பீகாரில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பங்கேற்ற கூட்டத்திற்கு ஆள் வராததால் மாவட்ட தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஐயோ பாவம் காசு கொடுத்தால் கூட அங்கே ஆள் வரமாட்டேன்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நாற்காலிகள்தான் மனிதர்போல காட்சி அளித்தன. கட்சியில் இருந்த மாவட்ட தலைவர் ஒருவரையும் நீக்கிவிட்டார் இனி யாரடா அங்கே செல்வார்கள் பாவம் பரிதாபம் கூலிக்கு மாரடிக்கூட அங்கே ஆள் கிடையாதாம் என்ன அலங்கோலம்


panneer selvam
ஏப் 22, 2025 16:51

Sankaranarayan ji , Congress in Bihar is lacking marketing skill . Congress should send a team to Tamilnadu to learn these technics on crowd gathering . Example chair occupied the participants shall be free for them after the function . Usual formula 200+quarter+Briyani along with transport is to be taught to Biharis . Whatever the fruits decoration shall be looted by participants after the function . Many novel ideas are available with Dravidian Parties. Let them come and learn from us


நாஞ்சில் நாடோடி
ஏப் 22, 2025 12:51

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று கருவறுத்த காங்கிரஸ் இம்மண்ணில் இருந்து வேரும் வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டும்...


V.Ravichandran
ஏப் 22, 2025 12:30

என்ன கார்கே இன்னுமா நீங்க தலைவர் என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் .


GoK
ஏப் 22, 2025 12:01

இந்தியாவில் வெயில் காலம், இளவரசர் அமெரிக்கா போயாச்சு... அங்கேயிருந்து ஐரோப்பா... இத்தாலி பாட்டி, மாமா வீடுகளில் கொஞ்ச நாள்... கார்கேஜு சொல்ப அட்ஜஸ்ட் மாடி, தோத்தா நீங்கதான் பொறுப்பு... ஜெயிச்சா? வாய்ப்பே இல்லை, இளவரசர் காரண்டி


RAJ
ஏப் 22, 2025 11:59

சாப்டுட்டு சாயுங்காலமா பேசலாம்...


Chanakyan
ஏப் 22, 2025 11:52

இதற்கு கட்டாயம் காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும். சுதந்திரம் கிடைத்த பின் தேசிய அளவில் பெரிய எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் தொடர்ந்து வெற்றியை சுவைத்த காங்கிரஸ் கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. போலி மதசார்பின்மை, ஊழல், குடும்ப அரசியல் போன்றவற்றால் அழிவின் விளிம்பில் உள்ளது. எந்த ஒரு தொடக்கத்திற்கும் நல்ல முடிவு உண்டு. சீதாராம் கேசரியிடம் இருந்து புடுங்கிய கடைசி கல்லை பப்புவின் கையில் கொடுத்திருக்கிறார்கள். எப்போது முடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


S.V.Srinivasan
ஏப் 22, 2025 11:42

மல்லி முதல்ல உங்க கட்சிக்குள்ள இருக்கிற ஓட்டைகளை அடைக்க பாருங்க. காங்கிரஸ் பெரும்பாலும் பாரதத்தில் தன்னுடைய தனித்தன்மையை இழந்து விட்டது. தேசிய கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்து வருகிறது. உங்கள் கட்சியில் களை எடுக்க வேண்டிய தலைகள் நிறைய இருக்கின்றன. எப்பவும் பி ஜே பி ஐ பற்றியும், மோடிஜியை பற்றியும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமா சிந்தித்து செயற்பட்டால் கொஞ்சமாவது கட்சிக்கு மரியாதை இருக்கும்.