உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலாப் பயணிகளை தாக்கிய அதிர்ச்சி வீடியோ காட்சி; கண் கலங்க வைக்கும் சோகம்!

சுற்றுலாப் பயணிகளை தாக்கிய அதிர்ச்சி வீடியோ காட்சி; கண் கலங்க வைக்கும் சோகம்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பைசரன் புல்வெளியில் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க வந்த அப்பாவி பயணியர், 26 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dkd88sr4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுற்றுலா பயணியரை குறிவைத்து தாக்கிய சம்பவத்தில், சந்தேகத்திற்குரிய நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். அவர்கள், முஸ்லிம் அல்லாதோரை குறிவைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க ராணுவத்தினர் போராடி வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புல் தரையில் சுற்றுலாப் பயணிகளை அமர வைத்து துப்பாக்கியால் பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். வீடியோவில், பலரும் இயற்கையை ரசித்துக்கொண்டு இருக்கும் நிலையில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் மக்களை துப்பாக்கியால் சுடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ இப்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் வருத்தங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

திண்டுக்கல் சரவணன்
ஏப் 24, 2025 17:22

சவுதி , இரான் போன்ற நாடுகளுடன் நமக்கு நல்ல உறவு உள்ளது.. சவூதி போன்ற நாடுகளில் இஸ்லாம் மாறிக்கொண்டு உள்ளது. பாகிஸ்தான் தன்னை பழமைவாத இஸ்லாமிய நாடாக காட்ட முயல்கிறது. எனவே இதை பாகிஸ்தான் பிரச்னையாக மட்டுமே பார்க்கவேண்டும்.


VSMani
ஏப் 24, 2025 16:08

தீவிரவாதிகள் பொது இடத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுடும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு தரம் இருக்கிறது. சுற்றுலா தளத்தில் ஒரு பாதுகாப்பு வீரர் கூட இல்லை? வரும் முன் காக்கவேண்டும். சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 24, 2025 16:51

இங்கே அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை வேங்கை வயல் பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை நாள்தோறும் கொலைகள் பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை மந்திரி அநாகரிகமாக பேசுகிறார் அங்கே பாதுகாப்பு நின்ற போலீஸ் அநாகரிகமாக பேசிய மந்திரிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் கள்ளச்சாராயம் மரணங்கள் பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை கனிம வள கொள்ளை பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை. அரசு மது பான விற்பனையில் மோசடி செய்கிறது பாதுகாப்பு போலீஸ் ஒருவர் கூட இல்லை.


Dharmavaan
ஏப் 24, 2025 17:01

இங்கே உட்கார்ந்து கொண்டு எதுவும் உளறலாம் கேள்வி இல்லை


Iniyan
ஏப் 24, 2025 16:04

அமைதி மார்க்கம் இருக்கும் வரை உலகில் அமைதி இல்லை.


அசோகன்
ஏப் 24, 2025 15:37

இவ்வளவு கொடூரம் நடந்த பிறகும் திமுக அதன் கூட்டணிகள் மோடியை மட்டுமே திட்டி தீர்க்கிறார்கள் பாகிஸ்தானை பற்றி குறைக்கூற வாய் வாயிகூட வரவில்லை..... என்ன பிறவிகளோ


R.MURALIKRISHNAN
ஏப் 24, 2025 16:56

கொடிய ஈன பிறவிகள்


Durai
ஏப் 24, 2025 23:24

எஸ் Yes


தயாளன், சென்னை.
ஏப் 24, 2025 15:15

பார்பதற்க்கும் கேட்ப்பதற்க்கும் கதறல் சத்தம் நெஞ்சை பிளக்கிறது.


முக்கிய வீடியோ