உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீபாவளி போனஸ் திருப்தியில்லை; டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

தீபாவளி போனஸ் திருப்தியில்லை; டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: தீபாவளி போனஸ் திருப்தி தரவில்லை என்று கூறி, ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.உ.பி.,யில் பதேஹாபாத்தில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுங்கச்சாவடியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலா ரூ.1100 தீபாவளி போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை, அதை உயர்த்தி தர வேண்டும் என்று நிர்வாகத்திடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.தங்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அதிருப்தியில் இருந்த ஊழியர்கள், தாங்கள் பணியாற்றும் சுங்கச்சாவடியில் எந்த கட்டணமும் வசூலிக்காமல் வாகனங்களை இலவசமாக செல்ல அனுமதித்து இருக்கின்றனர். கூடுதல் போனஸ் தொகை கோரி, சுங்கச்சாவடி ஊழியர்கள் 21 பேரும் இணைந்து இவ்வாறு செய்வது குறித்து சுங்கச்சாலையை நிர்வகிக்கும் நிறுவன உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுதனர்.அங்கு சென்ற போலீசார், போனஸ் விவகாரம் குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் 10 சதவீதம் கூடுதலாக போனஸ் தொகை தர நிர்வாகம் ஒத்துக் கொண்டது.இதையடுத்து, போராட்டத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் கைவிட்டு பணிக்கு திரும்பினர். 2 மணி நேரம் நீடித்த ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால், வாகனங்களுக்கு மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தாமரை மலர்கிறது
அக் 21, 2025 23:31

மிகவும் மோசமான செயல். வரிவருமானம் பாதிக்கும். ஊழியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
அக் 21, 2025 20:47

அடுத்து வரும் வண்டிகளில் எக்ஸ்ட்ரா பிடித்து விடுவார்கள்


தத்வமசி
அக் 21, 2025 17:33

கூடுதல் தொகை பத்து சதவிகிதம் என்று சொன்னார்களே தவிர எவ்வளவு என்று சொல்லவில்லை. தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் அரசின் பட்டியலில் இல்லை என்று சொல்கிறார்கள். எந்தெந்த சாவடிகளுக்கு அரசு அனுமதி உள்ளது என்பதை நஹாய் பகுதியில் வெளியிட்டால் மக்களுக்கும் வெட்டவெளிச்சமாய் தெரிய வரும். சந்தேகமும் புரளியும் அடங்கி விடும்.


KOVAIKARAN
அக் 21, 2025 17:11

ஊழியர்களுக்கு போனஸ் என்பது அந்த நிர்வாகம் சம்பாதிக்கும் லாபத்திலிருந்து கொடுக்கும் சிறிய பங்குதான். இங்கே டோல் கேட் வசூலில் அந்த நிர்வாகத்திற்கு எவ்வளவு லாபம் வந்திருக்கப்போகிறது? வசூலித்த பணம் எல்லாம் NHAI க்கு தானே போகும். இந்த ஊழியர்கள் செய்த காரியத்தினால், போக்குவரத்து மிக அதிகமாக உள்ள அந்த சாலையில் இரண்டு மணி நேரத்தில், இந்த தீபாவளி தினத்தில் பல நூறு கார்களும், மற்ற வாகனங்களும் இலவசமாக சென்றிருக்கும். அதனால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் தான் ஏற்பட்டிருக்கும். ஊழியர்களின் இந்தமாதிரியான செயல்கள் பாராட்டத்தக்கதல்ல. எடுத்ததற்கெல்லாம் வேலை நிறுத்தம் என்றால் அவர்கள் உருப்படமாட்டார்கள்.


R S BALA
அக் 21, 2025 16:33

முதலில் கொடுக்கப்பட்ட போனஸ் ரூ 1100 அல்லது 11000 ஆயிரமா?


visu
அக் 21, 2025 15:38

தவறான முன்னுதாரணம் கடமை தவறிய ஊழியர்களை பணி நீக்கம் அல்லது வேறு தணடனைகள் அளித்திருக்க வேண்டும் இது போன்ற போராட்டங்களால்தான் இந்தியா சீனவை வ விட பின் தங்கி இருக்கிறது பேசித்தான் தீர்த்திருக்க வேண்டும் இல்லை முன்னறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் செய்திருக்க வேண்டும்


Vasan
அக் 21, 2025 21:09

அவர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கவில்லை, இலவசமாக அனுமதித்தார்கள், பொது மக்களை பாதிக்காத வகையில். அவர்களை பாராட்டாமல், கடிந்து கொள்கிறீர்களே.


PR Makudeswaran
அக் 21, 2025 14:28

பாவம் தவறு.முதலில் சம்மதித்தது தானே. உருப்படாத கம்யூனிச கொள்கை.


SUBRAMANIAN P
அக் 21, 2025 13:47

சில இடங்களில் இதுபோன்ற செயல்பாடுகள்தான் பலனைத் தருகிறது.


Gnana Subramani
அக் 21, 2025 13:40

நல்ல வேளை. ஸ்டேட் பாங்க் நிறைய போனஸ் தருகிறது


SakthiBahrain
அக் 21, 2025 16:18

இல்லை என்றல் என்னாகும் ..பேங்க் ஓபன் பண்ணிவைப்பீங்களா ..


Selliah Ravichandran
அக் 21, 2025 13:26

Need to dismiss every body who’s on that time duty pls there’s many way to talk


SUBRAMANIAN P
அக் 21, 2025 13:46

ஐயா எந்தக் கம்பெனிக்கு முதலாளியோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை