உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டாசாய் பறந்த தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவு! என்ன ஒரு கலக்கல் சாதனை!

பட்டாசாய் பறந்த தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவு! என்ன ஒரு கலக்கல் சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது. தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். பயணிகளின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. தற்போது தீபாவளி முடிந்துவிட்டதால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு என்று பிரத்யேக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில், தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 75,000 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பாகவே tnstc.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி இருந்தது. அதன் எதிரொலியாக ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்.இந்த முன்பதிவு எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிக அதிகம். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறி உள்ளனர். இன்னமும் தீபாவளியை கொண்டாட ஊருக்குச் சென்ற ஆயிரக்கணக்கானோர் சென்னை திரும்பாமல் உள்ளனர். அடுத்து வரக்கூடிய நாட்களில் அவர்கள் திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வைகுண்டேஸ்வரன்
நவ 03, 2024 21:48

யார் சார் இந்த raja ங்கற ஐ டி. மனநோயாளியோ? புரியாத வார்த்தை கள் எழுதுவதே பொழப்பா வெச்சுண்டிருக்கார்? இவரோட ரெகுலர் உளறல்கள் : கோவால புறா, ஒன்கொள், ஓவா. இப்போ புதுசா " கண்ணபா " - கீழ்பாக்கம் கேசுங்கல்லாம் இங்க வந்து கிறுக்குதுங்க.


வைகுண்டேஸ்வரன்
நவ 03, 2024 13:28

Yadhav க்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் சிறந்த ஆட்சி பற்றிய உண்மையை எழுதுவதற்கு முட்டுக் கொடுப்பது என்று ஏன் சொல்றார்? இந்த வருடம் அவருக்கு தீபாவளி இல்லை போல, பாவம். அனுதாபங்கள்.


raja
நவ 03, 2024 14:37

கொத்தடிமைகளுக்கு திருட்டு திராவிடம் பேசி ஆறே மாதத்தில் 30000 கோடி கொள்ளை அடிக்கும் கோமாளிகள் ஆட்சி சிறப்பாகத்தான் இருக்கும் ... ரூவா 200 வருகின்றதே


raja
நவ 03, 2024 15:24

உடன் பிறப்பே என்ன இப்படி கேட்டுவிட்டாய் ... திராவிட மங்குணிகள் சபையில் ராசா கண்ணாபாவுக்கு என்ன சம்பந்தம் என்று நம்பர் ஒன்னு தலைவரிடம் கேட்ப்பது போல் இருக்கிறது உன் கேள்வி ..


Ramesh Sargam
நவ 03, 2024 12:41

தீபாவளிக்கு கிடைத்த வருமானத்தில் தரமான, மக்கள் பயணிக்கத்தக்க புதிய பஸ்களை தமிழக போக்குவரத்து கழகம் வாங்கவேண்டும். அதையும் கருணாநிதிக்கு சிலை வைப்பதில் செலவழிக்க கூடாது.


வைகுண்டேஸ்வரன்
நவ 03, 2024 11:54

தமிழ்நாடு அரசின் பல சாதனைகளில் இதுவும் சேர்கிறது. பசங்க எல்லாரும் ஊருக்கு வந்துட்டாங்க. பண்டிகை கொண்டாட்டமா இருந்தது. இன்று இரவு பணியிலிருக்கும் ஊருக்கு திரும்புகிறார்கள். அரசு க்கும் அமைச்சருக்கும் முதல்வருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.


N Sasikumar Yadhav
நவ 03, 2024 12:31

பார்த்து பக்குவமா முட்டு கொடுங்க இன்னும் ஓட்டுப்பிச்சை போடும் சிறுபான்மையிரினர் வரப்போறாங்க முட்டுகொடுக்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை