உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயை பார்த்து திமுகவுக்கு பயம்: அண்ணாமலை பேட்டி

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம்: அண்ணாமலை பேட்டி

புதுச்சேரி: ''விஜயை பார்த்து திமுகவினர் பயப்படுகின்றனர்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.புதுச்சேரியில் அவர் அளித்த பேட்டி: திமுக அரசு, ஒவ்வொரு முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லா தூண்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்கவில்லை. தீபத்தூணில் மட்டுமே ஏற்ற வேண்டும் என் கேட்கிறோம்.நிச்சயமாக தமிழக அரசியலில் இது எதிரொலிக்கும். இங்கு, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது. ஹிந்துக்களின் உணர்வை காயப்படுத்துவதை தட்டிக் கேட்கிறோம்.

கபட நாடகம்

மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு முதலில் காந்தி பெயர் வைக்கப்படவில்லை. 2008 ல் தான் வைக்கப்பட்டது. காங்கிரஸ் கபடநாடகம் போடக்கூடாது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். மஹாத்மா காந்தி மீது பெரிய மரியாதை உள்ள தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். திமுக வாக்குறுதி அளித்தும், வேலைவாய்ப்பு திட்டத்தின் நாட்களை அதிகரிக்கவில்லை. வாக்குறுதி அளிக்காமல் நாங்கள் அதிகரித்துள்ளோம்.

உறுதி

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போடாத எம்பிக்கள் அனைவரும் முருக பக்தர்கள். சிவ பக்தர்கள் தான். ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இந்திய அளவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆதரவு அளிக்கின்றனர். கையெழுத்து போட்ட 120 எம்பிக்கள் அனைத்து எம்பிக்கள் தோற்பது உறுதி.

மவுனம் ஏன்

கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்க வேண்டும் என சொன்னது விஜய். அரசியலில் அப்படி இருக்க முடியுமா? விஜய் கம்முன்னு இருங்க. கும்முனு இருங்க. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். இவ்வளவு பிரச்னை நடக்குது பேச மாட்டேன். கம்முனு இருந்தால் மக்கள் எப்படி ஓட்டுப்போடுவார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேச வே மாட்டேன் என்றால்அது எந்த மாதிரியான அரசியல். புதுச்சேரிக்கு வந்த விஜய், அன்றைக்கு சிறுபான்மையினர் என பேசினார். திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை . பெரும்பான்மையினர் துன்பத்தில் இருக்கும்போது ஏன் பேசவில்லை.

திமுக வரலாறு

ஸ்டாலின் முதல் தேர்தலிலேயே தோல்வியடைந்துள்ளார். தோல்வி குறித்து அவர் பாடம் எடுக்க வேண்டாம். 1949 ல் உருவான திமுக போட்டியிட்ட தேர்தலை கணக்கில் எடுத்துக் கொண்டால், திமுகவை போன்ற கட்சி இந்திய அரசியலில் கிடையாது. வரலாறு காணாததோல்வியை வெற்றி பெற்றுவிட்டனர். இந்ததேர்தலில் வெற்றி பெற்று விட்டது என்பதற்காக மரத்தில் மீது இருந்து கூவ வேண்டாம். 2026 ல் மக்கள் இறக்கப் போகிறார்கள்.

இருண்ட உலகத்தில்

திமுகவினருக்கு வேல்-ஐ பார்த்தால் பயம். சிவனை பார்த்தால் பயம். பாஜ, இந்து முன்னணியை பார்த்தால் பயம்.யாரை பார்த்தாலும் பயம். பொட்டு வைத்தாலும் குஙகுமத்தை பார்த்தாலும் பயம். அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம். குன்றை பார்த்தால் பயம் . விஜயை பார்த்தால் அவர்களுக்கு பயம். அதனால் அரண்டு போய் கிடக்கிறார்கள். இருண்ட உலகத்தில் வாழ்கிறார்கள். அனைத்தையும் பார்த்தும் பயப்படுகிறார்கள்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

வாழ்வியல் முறை

முன்னதாக புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசியதாவது: எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஹிந்து வாழ்வியல் முறை அடிப்படையில் அப்படி தான் வடிவமைக்கப்பட்டது. இதனை யாரும் தோற்றுவிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த வாழ்வியல் முறை உள்ளது. குன்று இருந்தால் அது குமரன் இருக்கும் இடம்.

ஐதீகம்

ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இஸ்லாம், கிறிஸ்து மதம் தோன்றுவதற்கு முன்பு குன்றில் தீபம் ஏற்றுவது என்பது நமது வழக்கம். குன்றில் கீழே யாரும் தீபம் ஏற்றுவார்களா? யாரும் பார்க்க முடியாது. உச்சியில் தீபம் ஏற்றினால் மட்டும் தான் வீட்டில் இருந்தவர்கள் அதை பார்த்த வீட்டில் ஏற்றுவார்கள். அதுதான் ஐதீகம். குன்று உச்சியில் தீபம் ஏற்றும் ஐதீகம் எதற்கு வந்தது என்றால், அங்கு தீபத்தை ஏற்றினால் தான் 10 - 50 கிமீ தொலைவில் இருக்கும் மகளிர், பெண்கள், தாய்மார்களுக்கும் தெரியும். கோவிலில் தீபம் ஏற்றிவிட்டனர். நாமும் நம்முடைய வீட்டில் ஏற்ற வேண்டும். அதன் பிறகு தீபம் ஏற்றுவர் . இதுதான் நடைமுறை ஐதீகம். விஞ்ஞானம். இதில் விவாதத்துக்கு ஒன்றும்இல்லை

உளறல்

தீபம் ஏற்றுவதற்கு தீபத்தூண் வைக்காமல் எதற்கு வைத்துள்ளனர் என திமுக அரசு, அறநிலையத்துறையிடம் கேட்கிறேன். போட்டோ எடுக்கவா வைத்துள்ளனர்.இத்தனை காலமாக அது தீபத்தூண் அல்ல. ஆங்கிலேயர்களின் சர்வே கல் . அதை வைத்து அளந்தனர் என திமுக கூறியது. நேற்று முதல் புதிதாக இன்னொன்றை கிளப்பியுள்ளனர். அது சர்வே கல் இல்லை. சமணர் காலத்தில் இருந்த கல். சமணர் காலத்தில் எதற்கு கல் இருந்தது என திமுகவினரிடம் கேட்டால், அதற்கு அவர்கள் ' அந்தக் காலத்தில் படிக்க முடியாது என்பதால், கல் மீது தீபம் ஏற்றி கீழே அமர்ந்து படிப்பார்கள்' என்கின்றனர். அப்படி யாராவது படித்து பார்த்துள்ளோமா?தினமும் ஒரு பொய்யை சொல்லி அவர்களின் வாதத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக தினமும் உளறிக் கொண்டுள்ளனர். முட்டாள்தனமான பொய் என்பது உளறல் என்பது அர்த்தம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sun
டிச 17, 2025 12:24

எல்லாம் யாமிருக்க பயமேன்? என்ற அந்த முருகப் பெருமானுக்கே வெளிச்சம் !


kamal 00
டிச 17, 2025 12:19

கொத்தடிமை திமுக


Modisha
டிச 17, 2025 07:36

50 கிலோமீட்டர் தூரத்தில் விளக்கு தெரியுமா ?


kamal 00
டிச 17, 2025 12:25

படிச்சிருந்தா தெரியும்.... ஆட்டைய போட்டு பாஸ் பண்ணுனா இப்படி உல்ட்டா கேள்வி தான் வரும்


pmsamy
டிச 17, 2025 07:33

பாஜகவை பார்த்து திமுக பயப்படல சின்ன பசங்கள பாத்து திமுக பயப்படுமா


vivek
டிச 17, 2025 09:59

அப்போ எதுக்கு உன் கால் மட்டும் நடுங்குது


kamal 00
டிச 17, 2025 12:21

இன்பநிதி யை பார்த்து திமுக பயப்படணும்.


kamal 00
டிச 17, 2025 12:22

உன் உடம்பே திமுக விக்கிற சாராயதால நடுங்குது திராவிட கொத்தடிமையே


சூர்யா
டிச 16, 2025 22:17

அப்ப தேசிய ஜனநாயக கூட்டணியைக் கண்டு தி.மு.கவிற்கு பயம் இல்லையா? விஜயை கண்டு தி.மு.கவிற்கு பயம் என்பதை விஜய் கட்சியில் உள்ளவர்கள் தானே சொல்ல வேண்டும்?


Oviya Vijay
டிச 16, 2025 21:54

தவெகவைப் பார்த்து திமுக பயப்படுகிறதா இல்லை பாஜகவின் தமிழக அணி முதல் டெல்லி தலைமை வரை பயப்படுகிறதா என்பது தமிழகத்தில் உள்ள அனைவருக்குமே தெரியும்... விஜயின் அரசியல் விஜயத்திற்கு முன்னர் வரை தனக்கு தமிழகத்தில் இருந்த முக்கியத்துவம் திடீரென்று எதிர்பாராவிதத்தில் குறைந்ததையடுத்து, பெரும் ஏமாற்றத்துடன் பேசியதன் எதிரொலிப்பே அண்ணாமலையின் இந்த பேட்டி... கடந்த தேர்தலில் அண்ணாமலைக்கும் சீமானுக்கும் இருந்த முக்கியத்துவம் இனி அப்படியே விஜய்க்கு அது மடைமாற்றம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை எதிரில் இருக்கும் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... இருந்தாலும் இந்த தேர்தலில் திமுக முதலிடமும் தவெக இரண்டாமிடமும் மற்ற கட்சிகள் யாவும் அரசியல் களத்திலிருந்து காணாமலும் போகப் போகிறது...


vivek
டிச 16, 2025 22:27

ஓவியரே... உன் கதறல் சத்தம் பத்தல....இன்னும் நல்ல கதறு ....எதுக்கும் ECG x-ray எல்லாம் ரெடியா இருக்கவும்...ஹார்ட் பத்திரம்


vivek
டிச 16, 2025 22:28

ஓவியருக்கு பிஜேபி என்றால் உடனே பேதி ஆகுது


kamal 00
டிச 17, 2025 12:20

திமுக வுக்கு ......


Mohanakrishnan
டிச 16, 2025 21:52

நாளை அந்த துணை பிரிட்டிஷ் ஆட்சியர் காலத்தில் இருந்த கலெக்டர் ராபர்ட் பீட்டர் என்றவர் இறந்த கல்லறை என்றும் சொல்லலாம்


kr
டிச 16, 2025 21:24

DMK has no one in its ranks to answer objectively to brilliant comments by Annamalai. Model government and its gang will now start abusing Annamalai and Sangh parivar.


Suppan
டிச 16, 2025 20:57

சமணத்துறவிகள் சூரியன் மறைந்த பிறகு உணவருந்த மாட்டார்கள். விளக்கு ஏற்றினால் அதில் பூச்சிகள் விழுந்து மடியும் என்பதனால் விளக்கும் ஏற்றமாட்டார்கள் . உட்கார்ந்து பேசுவதற்கு எதற்கய்யா விளக்கு? இந்த திமுக தற்குறிகள் விளக்குவார்களா ? அடுத்ததாக என்ன உருட்டலாம் என்று யோசியுங்கள் ஆனால் சமணர்கள் தீபாவளியன்று மஹாவீரின் நிர்வாண தினம் என்பதால் விளக்கு ஏற்றுவார்கள். இது பின்னால் வந்த வழக்கம்.


Maheswaran Kannan
டிச 16, 2025 20:39

விஜய்யை காஷ்மீர் அனுப்பி இராணுவ வீரராக சிறிது காலம் பணிபுரிய சொல்லவேண்டும்


kamal 00
டிச 17, 2025 12:23

உன்னைய கூவத்துல தள்ளி விட்டு மீன் புடிக்க சொல்லணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை