யமுனை நீரை குடிப்பீரா?
'பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் தான் புனித நீராடியது போல், யமுனை நதியில் கெஜ்ரிவால் குளிப்பாரா' என யோகி ஆதித்யநாத் சவால் விட்டுள்ளார். அடுத்தவர்களுக்கு சவால் விடும் முன் உ.பி.,யின் மதுரா வழியாக பாயும் யமுனை நதியில் இருந்து ஒரு குவளை நீரை எடுத்து அவர் பருகுவாரா?அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி, மூன்றாவது துணை முதல்வர்!
மஹாராஷ்டிரா முதல்வர் பதவிக்காக சிவசேனா கட்சியை உடைத்துச் சென்றவர் ஏக்நாத் ஷிண்டே. தற்போது அவர், இரண்டு துணை முதல்வர்களில் ஒருவராக உள்ளார். மேலும் மூன்றாவது துணை முதல்வர் வர உள்ளார். அவர் ஏக்நாத் ஷிண்டே அணியிலிருந்து பதவியேற்க உள்ளார்.சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணிஅவர்கள் அராஜகவாதிகள்!
ஆம் ஆத்மி என்றால் தற்போது அராஜகவாதிகள், கிரிமினல்கள் என்று ஆகிவிட்டனர். அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைப்பு உள்ளது. அதனால் தான் அவர்கள் அடிக்கடி டில்லி போலீசாருடன் மோதுகின்றனர். போக்குவரத்து விதிகளை கூட மதிப்பதில்லை.ஷெஷாத் பூனாவாலா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,