கர்நாடகா முதல்வர் சித்தராமையா உடன் கருத்து வேறுபாடா? விவாதிக்க விரும்பவில்லை என சிவகுமார் மழுப்பல்!
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா உடன் கருத்து வேறுபாடா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நான் இப்போது எதையும் விவாதிக்க விரும்பவில்லை'' என துணை முதல்வர் சிவகுமார் மழுப்பலாக பதில் அளித்தார்.கர்நாடகாவில் நவம்பர் மாதத்தில் முதல்வர் மாற்றம் நடக்கும்' என்ற பேச்சு அடிபடும் நிலையில், சித்தராமையாவை மாற்றலாமா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் மேலிடம் கருத்து கேட்க ஆரம்பித்து உள்ளது என பேசப்படுகிறது. அதேநேரத்தில், 'சித்தராமையாவை மாற்றும்படி, தன் ஆதரவாளர்களுக்கு துணை முதல்வர் சிவகுமார் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் பரவியதால், மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.இந்நிலையில் இன்று (ஜூலை 02) இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, துணை முதல்வர் சிவகுமார் அளித்த பதில்: எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நான் அவருக்கு ஆதரவாக நின்று அவரை ஆதரிக்க வேண்டும். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கட்சி மேலிடம் என்ன சொன்னாலும், அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அது நிறைவேறும். நான் இப்போது எதையும் விவாதிக்க விரும்பவில்லை. லட்சக்கணக்கானவர்கள் இந்தக் கட்சியை ஆதரிக்கிறார்கள். வரும் 2028ம் ஆண்டு நடைபெறும் சட்டபை தேர்தல் தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏன் சந்தேகம்?
இதற்கிடையே, ''நான் ஐந்து ஆண்டுகள் கர்நாடக முதல்வராக இருப்பேன்; ஏன் சந்தேகம் வருகிறது'' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.