உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான்கு முறை பலாத்காரம் செய்த போலீஸ் எஸ்.ஐ., கையில் குறிப்பு எழுதி வைத்து டாக்டர் தற்கொலை

நான்கு முறை பலாத்காரம் செய்த போலீஸ் எஸ்.ஐ., கையில் குறிப்பு எழுதி வைத்து டாக்டர் தற்கொலை

புனே: மஹாராஷ்டிராவில், போலீஸ்காரர் இருவர், தொடர்ந்து பலாத்காரம் செய்து தொல்லை தந்ததால் பெண் டாக்டர், உள்ளங்கையில் குறிப்பு எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர், பல்தானில் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து, அவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண் டாக்டர் தன் உள்ளங்கையில், இரு போலீஸ்காரர்களின் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதில், 'போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் கோபால் படானே, என்னை கடந்த ஐந்து மாதத்தில், நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்தார். 'மற்றொரு போலீஸ்காரரான, பிரசாந்த் பங்கர் என்பவரும் மன ரீதியாக எனக்கு தொல்லை தந்தார். இதனால், மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்' என, தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழலில், பெண் டாக்டர் குறிப்பிட்டுள்ள இருவரையும் சஸ்பெண்ட் செய்ய மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மஹாராஷ்டிரா மகளிர் கமிஷன் தலைவர் ரூபாலி சகன் கர் கூறுகையில், ''சம்பவம் குறித்து நாங்களாகவே முன்வந்து விசாரணையை துவங்கி உள்ளோம். ''குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது,'' என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை