உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை; சிகிச்சைக்கு வந்த இருவர் வெறிச்செயல்

டில்லியில் டாக்டர் சுட்டுக்கொலை; சிகிச்சைக்கு வந்த இருவர் வெறிச்செயல்

புதுடில்லி: தலைநகர் டில்லியின் ஜெய்த்பூர் பகுதியில் மருத்துவமனையில் பணியில் இருந்த ஜாவித் அக்தர் என்ற டாக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சிகிச்சைக்கு வந்த வாலிபர்கள் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டில்லியின் ஜெய்த்பூர் பகுதியில் நிமா மருத்துவமனையில் டாக்டர் ஜாவித் அக்தர் பணியில் இருந்தார். சிகிச்சைக்காக வந்த இருவர் டாக்டர்களை சந்திக்க அனுமதி கோரினர். அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்ற வாலிபர்கள், அங்கிருந்த டாக்டர் ஜாவித்தை சுட்டுக்கொலை செய்தனர். இந்த சம்பவம் அங்கிருந்து அனைவரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்தது. வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.டில்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் கைப்பற்றி, விசாரணையை துவக்கினர். சமீபத்தில், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதி கேட்டு டாக்டர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த சூழலில், தலைநகர் டில்லியில் டாக்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

துப்பறிவாளன்
அக் 03, 2024 17:58

என்ன? தொழில் போட்டியாத்தான் இருக்கும். இல்லே சுட்டவங்க மூர்க்கனுங்களா இருப்பாங்க. அதுவும் இல்லேன்னா பொம்பளைங்க சமாச்சாரமா இருக்கும்.


Thirumal Kumaresan
அக் 03, 2024 16:53

டெல்லியில் என்ன நடக்கிறது, எல்லவருடைய துப்பாக்கியும் பிடுஙக்குங்கள்.


ram
அக் 03, 2024 15:20

எதிர் கட்சி தலைவரை நாடு கடத்தினால் எல்லாம் சரியாகும்.


Duruvesan
அக் 03, 2024 12:25

சாரி சார், ராவுலு விடியலு சிறுபானியினரின் பாதுகாப்பு ஒன்றிய ஆட்சியில் கேள்வி குறி ஆகி உள்ளது, போராட்டம் பண்ணலயா?


Ramesh Sargam
அக் 03, 2024 11:26

அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவிலும் அந்த துப்பாக்கி கலாச்சாரம் பரவத்தொடங்கி இருக்கிறது. நமது பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் இதை உடனே தடுத்து நிறுத்த ஆவண செய்யவேண்டும். இல்லையென்றால் அமேரிக்கா கதிதான்.


narayanansagmailcom
அக் 03, 2024 10:49

இனி எல்லாம் ஆன்லைன் டிரீட்மென்ட் தான்.


RAMAKRISHNAN NATESAN
அக் 03, 2024 10:40

மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் அதிகரித்து வருகின்றன ..... எந்த அரசும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை ......


Anantharaman Srinivasan
அக் 03, 2024 10:31

சுட்டு கொல்லப்பட்ட. டாக்டர்க்கும் வாலிபர்களுக்கும் ஏதேனும் முன் விரோதம் இருகுமோ..?


முக்கிய வீடியோ