உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி!

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி!

ஸ்ரீநகர்: ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி முகமை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்'' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x29a00lz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், ஆபரேஷன் சிந்தூர நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அவர்களுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்தார். ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

உறுதிமொழி

நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தாலும், முதலில் இந்திய குடிமகன். இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிரிகளை அழித்த உங்களின் சக்தியை உணர வந்துள்ளேன். நேரம் வரும்போது கடினமான முடிவுகளை எடுப்போம் என்பதற்கான உறுதிமொழி தான் ஆபரேஷன் சிந்தூர். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

அணு ஆயுதங்கள்

கடினமான சூழலில் உங்களுடன் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ராணுவத்தினருக்கு நாடே கடமைப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம். முரட்டுதனமான நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு சக்தி முகமை பரீசிலனை செய்ய வேண்டும். அணு ஆயுதங்களை வைத்து கொண்டு பாகிஸ்தான் அச்சுறுத்துகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்குகளை சர்வதேச அணு சக்தி முகமை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்

நாடே பெருமிதம்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் இடம் அணு ஆயுதம் இருப்பது குறித்து உலக நாடுகள் யோசிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது. பதிலடி கொடுக்க தெரியும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை செய்தி. இங்கு இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தியதற்காக முழு தேசமும் உங்கள் அனைவரையும் நினைத்து பெருமை கொள்கிறது. கடந்த 35-40 ஆண்டுகளாக, இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

ராணுவ வீரர்களுடன் சந்திப்பு!

காஷ்மீர் சென்றுள்ள ராணுவ தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி அடைய செய்த ராணுவ வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ராணுவ வீர்கள் மத்திய பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த வீரர்களை பாராட்டினார். எந்தவொரு சவாலுக்கும் தீர்க்கமான பலத்துடன் பதிலளிக்க, பாதுகாப்பு படை வீரர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என உபேந்திர திவேதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மீனவ நண்பன்
மே 15, 2025 22:20

பாகிஸ்தான் மக்கள் தொகை தான் அணு ஆயுதம் ..ஒரு நாள் வெடிக்கும்


Vijay D Ratnam
மே 15, 2025 17:10

உலகில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் மொத்தம் ஒன்பது. United States, Russia, France, China, United Kingdom, India, Israel, Pakistan and North Korea ஆயுதமாக அணுகுண்டுகள் 13000 வரை இருக்கும் என்று சொல்கிறார்கள்.எந்த நாடாவது நாங்கள் அண்டை நாட்டில் அணுகுண்டு வீசுவோம் என்று சொல்லி இருக்கிறதா. படிப்பறிவில்லாத அறிவுகெட்ட முண்டங்கள் வாழும் பாகிஸ்தான் தவிர. பாகிஸ்தான் ராணுவ அமைச்சரே நாங்கள் தேவைப்பட்டால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம், எங்களிடம் 133 குண்டுகள் இருக்கிறது என்று மீடியாவை கூப்பிட்டு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார். பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் வேறொரு நாட்டினுடையது என்றும் பேச்சு உள்ளது. அவர்களிடம் அந்தளவுக்கு அறிவோ, கட்டமைப்போ கிடையாது என்பது உலகத்துக்கே தெரியும் .


ஆரூர் ரங்
மே 15, 2025 14:31

பட்ஜெட்டில் அணு ஆயுத உற்பத்திக்கு பெருமளவில் செலவழிக்கும் நாடு ஏழை நாடா? அப்படிப்பட்ட நாட்டுக்கு IMF எதற்கு கடன் தர வேண்டும்? எனக்கென்னவோ பாகிஸ்தானிடமுள்ள அணுகுண்டுகள் அதனுடையதுமல்ல. அதன் கட்டுப்பாட்டிலுமில்லை என்றே தோன்றுகிறது. அதனால்தானே அதன் அணு ஆயுத கிடங்கு தாக்கப்பட்டவுடனே இன்னொரு பெரிய நாடு பதற்றமடைந்தது?..


Santhakumar Srinivasalu
மே 15, 2025 13:33

பயங்கரவாதிகளையும் நாட்டிற்குள் வைத்து கொண்டு இந்த பாக். எப்படி அணு ஆயுதங்களை காப்பாற்ற முடியும்? இது நமக்கு தான் ஆபத்து! இந்த அணு ஆயுதங்கள் பாக்.கிடம் கண்டிப்பாக இருக்க கூடாது!


புதிய வீடியோ