உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரி, முதலீடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள்; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்

வரி, முதலீடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள்; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''அமெரிக்காவுக்கு வரிகள் மற்றும் முதலீடுகள் மூலம் கோடிக்கணக்கான டாலர்கள் வருமானமாக கிடைக்கின்றன,'' என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை வரிகளாகவும் முதலீடுகளாகவும் நாங்கள் பெறுகிறோம். 8 போர்களில் 5 போர்களை நேரடியாக நிறுத்திவிட்டேன்.ஏனெனில் அவர்கள் சண்டையை நிறுத்தாவிட்டால் அல்லது இன்னும் சிறப்பாக, அவை தொடங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் தான் இதற்கு காரணம். பணவீக்கம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இல்லை. ஜோ பைடனின் கீழ் அமெரிக்க வரலாறு மிக மோசமானது. பங்குச் சந்தை 9 மாதங்களில் 48வது முறையாக உயர்ந்துள்ளது; இதுவரை இல்லாத உச்சத்தில் இருக்கிறது. நாட்டை அழிக்க அனுமதிக்கும் நீதிமன்ற பிரச்னை இனி இல்லை.இது அமெரிக்கா இதுவரை இருந்ததிலேயே மிகவும் பணக்கார, வலிமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாறும். நவம்பர் 5ம் தேதி (தேர்தல் மூலம் வெற்றி பெற்றதை குறிப்பிடுகிறார்) மற்றும் வரிகள்தான் அதற்கான காரணங்கள் ஆகும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி