உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ரூ.65 கோடி நன்கொடை

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ரூ.65 கோடி நன்கொடை

பெங்களூரு: ''ஹெப்பகோடி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, பயோகான் நிறுவனம், 65 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது,'' என, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் அஞ்சும் பர்வேஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:ஹெப்பகோடி மெட்ரோ ரயில் நிலையம் கட்ட, பயோகான் நிறுவனம் 65 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. எனவே ஒப்பந்தப்படி அந்த ரயில் நிலையத்துக்கு, 'பயோகான் ஹெப்பகோடி ஸ்டேஷன்' என, பெயர் சூட்டப்பட்டது.பயோகான் மட்டுமின்றி, இன்போசிஸ், எம்பசி உட்பட பல நிறுவனங்கள், மெட்ரோ நிலையங்களுக்கு தங்கள், நிறுவனத்தின் பெயரை வைக்க, நன்கொடை வழங்கியுள்ளன. மெட்ரோ ரயில் திட்டம், அரசு, தனியார் ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது. இதுபோன்று நன்கொடையால், அரசுக்கு பொருளாதார சுமை குறையும்.ஆர்.வி.சாலையில் இருந்து, பொம்மசந்திராவுக்கு இணைப்பு ஏற்படுத்தும் மஞ்சள் மெட்ரோ பாதையில், அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் ரயில் போக்குவரத்து துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி