உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைவிட்டு விடாதீர்கள்! நிகில் குமாரசாமி உருக்கம்

கைவிட்டு விடாதீர்கள்! நிகில் குமாரசாமி உருக்கம்

ராம்நகர்: 'ஹை வோல்டேஜ்' தொகுதியான சென்னப்பட்டணாவில், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், பம்பரமாக சுற்றி வந்து பிரசாரம் செய்கின்றனர்.ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தொகுதியில், நிகில் குமாரசாமி தே.ஜ., கூட்டணி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். மத்திய அமைச்சர் குமாரசாமியும், வேட்பாளர் நிகிலும் தனித்தனியாக பிரசாரம் செய்கின்றனர். இவர்களுடன் பா.ஜ., தலைவர்களும் கைகோர்த்துள்ளனர்.ஹொங்கனுார், மளூர் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மைசூரு எம்.பி., யதுவீர், நேற்று பிரசாரம் செய்தார். தேவரஹொசஹள்ளியில் இருந்து குமாரசாமியும், யதுவீரும் நேற்று காலை பிரசாரத்தைத் துவக்கினர்.கொட்லுார், நீலகுன்டனஹள்ளி, மசிகவுடனதொட்டி, சுன்னகட்டா, நீலசந்திரா ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தனர். மொளதொட்டி, கோடிபுரா கிராமங்களில் நேற்று மாலை பிரசாரம் செய்தனர்.கோடம்பள்ளியில் இருந்து நேற்று காலை, வேட்பாளர் நிகில், ஹுனசிகனஹள்ளி பிசிலம்மா கரகத தேவிக்கு பூஜை செய்துவிட்டு, பிரசாரத்தைத் துவக்கினார். சென்னப்பட்டணா தாலுகா ம.ஜ.த., தலைவர் ஜெயமுத்து உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர்.ஷியானபோகனஹள்ளி, வட்டரஹள்ளி, பாச்சஹள்ளி, ஹொன்னிகனஹள்ளி, காரகொப்பா, ஜெ.பேடரஹள்ளி உட்பட, பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஓட்டு கேட்டனர். 'தாய்மார்களே இம்முறையும் என்னை கை விட்டு விடாதீர்கள்' என, நிகில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை